இலவசம்,மாணவர்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம்.திருச்சி பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க தொடரும் அவதாரம் அட்டகாசம்.வருபவர்களுக்கு லேப்டாப், சைக்கிள்,ஸ்கூல் பேக் பரிசாக வழங்கப்பட உள்ளது
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அருண் ஹோட்டல், கலைய அரங்கம், எதிரில்,பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள மைதானத்தில் SSS என்டேர்டைன்மெண்ட் ஹாலிவுட் அவதார் பொருட்காட்சியை கடந்த டிசம்பர் மாசம் திருச்சி தினமலர் ஆசிரியர் ஆர். ராமசுப்பு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இந்த பொருட் காட்சியில் மிக பிரமாண்டமாய் தத்துவமாக வடிவமைக்கப்பட்டு அவதார் பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இப்பொருட்காட்சியில் ஜெயின்ட்வீல், கொலம்பஸ், ரோபட்டிக் டாக், 3D ஷோ, பேய் வீடு, வாட்டர் பலூன், படகு சவாரி, பலூன் கேம்ஸ், ஹெலிகாப்டர்,ரோலர் கோஸ்டர்,மினி கார், மினி பைக்,பனி உலகம், பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், குழந்தைகள் விளையாடி மகிழ ரிமோட் கார் ஹெலிகாப்டர் ஏரோபிளேன் ட்ரோன் மற்றும் எண்ணற்ற விளையாட்டு சாதனங்கள், ரியல் எஸ்டேட், கைவினைப் பொருட்கள் மகளிர் சுய உதவி குழு அரங்குகள் மற்றும் பல மெய்சிலிர்க்க வைக்கும் அரங்குகள் நிறைந்துள்ளன.
இந்த நிலையில் ஜனவரி மாதம் 31 ம் தேதியுடன் முடிவுபடைய இருந்த அவதார் பொருட்காட்சி திருச்சி பொதுமக்களின் வேண்டுகோளுக்காக பிப்ரவரி மாதம் முழுவதும் தொடர்ந்து நடைபெற உள்ளது.
மேலும் தற்போது ஒரு காட்சிக்கு வரும் மாணவர்களுக்கு (1வது முதல் 8ம் வரை படிக்கும்) அனுமதி முற்றிலும் இலவசம் என நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் கொண்டு வரும் டிக்கெட்டில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 10 நபர்களுக்கு லேப்டாப், 25நபர்களுக்கு சைக்கிள், 300 நபர்களுக்கு ஸ்கூல் பேக் வழங்கப்பட உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்.
தமிழ்நாடு அனைத்து பொருட்காட்சி நல சங்க தலைவர் அன்வர்ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் சலீம், பெரம்பலூர் நளபாகம் குழுமத் தலைவர் முத்துவீரன், காசி விஸ்வநாதன், ஆசிரியர் பாபு, அய்யர் மாமா,கார்த்தி,முரளி SSS என்டர்டெயின் மெண்ட் உரிமையாளர் சுதாகரன் மற்றும் எஸ் டிவி பாலு ஆகியோர் இதனை அறிவித்து உள்ளனர்.

