மணப்பாறை அருகே பரிதாபம்
தடுப்பூசி செலுத்தப்பட்ட 5 மாத ஆண் குழந்தை திடீர் சாவு.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள எலமணம் கோணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 32).
இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் அவரது மனைவி கர்ப்பம் தரித்தார்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
பின்னர் மருத்துவர்கள் ஆலோசனைப்படி அக்குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.
அந்த வகையில் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தும் தவணை வந்தது.
இதை யடுத்து பெற்றோர் குளத்துப்பட்டி ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொண்டு சென்று தடுப்பூசி செலுத்தினர்.
பின்னர் வீடு திரும்பினர்.
வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திலேயே குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் வயிற்றுபோக்கு ஏற்பட்டுள்ளது. இதைபடுத்து
உடனடியாக குழந்தையை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து சிவகுமார் அளித்த புகாரின் பேரில் புத்தாநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் தடுப்பூசி செலுத்தப்பட்ட பெண் குழந்தை இறந்த நிலையில் தற்போது மீண்டும் திருச்சி மாவட்டத்தில் ஒரு ஆண் குழந்தை தடுப்பூசி செலுத்தப்பட்டு இறந்த சம்பவம்குழந்தை பெற்றெடுத்த தாய்மார்கள் இடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

