Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது .

0

'- Advertisement -

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது .

 

Ad banner

திருச்சி புத்தூர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

TVK ad

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தீபிகா தலைமையில் அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் புத்தூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு டீக்கடை அருகில் சென்று பார்த்த பொழுது அங்கு மூன்று வாலிபர்கள் நின்று கொண்டு போதை மாத்திரை விற்றுக் கொண்டு இருந்தது உள்ளனர்.

 

இதனை பார்த்த போலீசார் அந்த மூன்று பேரையும் மடக்கி பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர் அப் போது புத்தூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த பிரகாஷ் (வயது 21) ஜெய நவீன் ராஜ் (வயது 22 )ராஜபாண்டி (வயது 23) என்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் மூன்று வாலிபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து 26 போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.