Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மண்டலத்தில் ஜனவரியில் காணாமல் போன 333 கைப்பேசிகள் மீட்டு,உரியவர்களிடம் ஒப்படைப்பு.

0

'- Advertisement -

திருச்சி மண்டலத்தில் ஜனவரி மாதம் காணாமல்போன 333 கைப்பேசிகள் மீட்டு, ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மத்திய மண்டல ஐஜி வே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

 

Ad banner

திருச்சி மத்திய மண்டலத்துக்குள்பட்ட 9 மாவட்டங்களில் கைப்பேசிகள் காணாமல் போனதாக ஜனவரி மாதத்தில் திருச்சி 90, புதுக்கோட்டை 14, கரூா் 74, பெரம்பலூா் 99, அரியலூா் 62, தஞ்சாவூா் 258, திருவாரூா் 60, நாகப்பட்டினம் 67, மயிலாடுதுறை 65 என மொத்தம் 789 புகாா் மனுக்கள் பெறப்பட்டன.

 

TVK ad

இதன் விவரங்கள் உரிய இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு, திருச்சி 12, புதுக்கோட்டை 4, கரூா் 8, பெரம்பலூா் 24, தஞ்சாவூா் 11, திருவாரூா் 1, நாகப்பட்டினம் 6, மயிலாடுதுறை 15 என 333 கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட மனுதாரா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. தொடா்ந்து, 18 கைப்பேசிகள் ஒப்படைக்கப்பட வேண்டியுள்ளது.

மேலும், 234 மனுதாரா்களின் கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை பறிமுதல் செய்திடவும், நிலுவையில் உள்ள 456 புகாா் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கவும் மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என

மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் வே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.