Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நிருபர்களை தாக்கிய ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி . தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே ஒரு தொகுதியை இழந்தது திமுக.

0

'- Advertisement -

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் அரசு அனுமதியை மீறி அதிக அளவில் கனிமவள கொள்ளை நடைபெறுவதாக புகார் எழுந்தது.

 

கடந்த 2022ஆம் ஆண்டு குவாரிக்கு ரூ.23.55 கோடி அபராதம் விதித்தபோதும் இந்த கல்குவாரி தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறப்பட்டது.

 

இந்த புகார் தொடர்பாக செய்தி சேகரிக்க திருச்சி நியூஸ் தமிழ் மண்டல செய்தியாளர் கதிரவன் தனது கேமரா மேன் செபாஸ்டின் உடன் சென்றார்.

 

இவர்கள் செய்தி சேகரிக்க வருவதை அறிந்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மற்றும் அவரது அடியாக்கள் நிருபர்களை சூழ்ந்து கொண்டனர்.

 

அப்போது கனிமவள கொள்ளை கும்பல் நிருபர் கதிர்,ஒளிப்பதிவாளர் செபாஸ்டின்,வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர்களை சுற்றிவளைத்து தாக்கியது. கேமரா, மைக் உள்ளிட்ட உபகரணங்களை பிடுங்கிய அவர்கள் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

 

இந்த நிலையில் குவாரி பகுதியில் இருந்து நிருபர் மற்றும் ஒளிப்பதிவாளர் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

திமுக எம்எல்ஏ பழனியாண்டி உள்ளிட்ட 50 பேர் கொண்ட கும்பல், நிருபர், ஒளிப்பதிவாளர், வழக்கறிஞர் உள்ளிட்ட 4 பேரை தாக்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த எஸ்.பி. ஜோஸ் தங்கையா உத்தரவின் பேரில் டிஎஸ்பி தலைமையிலான போலீஸ் படை விரைந்தது. ஒரு மணி நேரத்திற்குப் பின் படுகாயங்களுடன் 4 பேரும் மீட்கப்படனர்.

 

காயம் அடைந்த அனைவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் முதல்கட்ட சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

 

ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நேரடியாக சென்று நிருபர்களை தாக்கிய இந்த சம்பவத்தால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் முதல்வர் மு க ஸ்டாலின் போட்டியிட்டால் கூட திமுக வெற்றி பெற முடியாது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியின் இந்த செயல்பாட்டால் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே திமுக இந்த தொகுதியை இழந்து விட்டது

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.