Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருவெறும்பூரில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.

0

'- Advertisement -

சுமார் 350 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களின் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் மகேஷ் பொய்யாமொழி.

 

Ad banner

திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குண்டூர் ஊராட்சியில் குண்டூர், திருவளர்ச்சி பட்டி, ஐயம்பட்டி ,அயன்புத்தூர், ஆகிய கிராமங்களை அடக்கிய ஊராட்சியாக உள்ளது.

 

மேலும் இந்த ஊராட்சியில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது,

 

இந்நிலையில் இந்த ஊராட்சியில் சுமார் 350 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் தற்பொழுது விவசாயம் செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஒன்று அமைத்த தர வேண்டுமென திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

TVK ad

மேலும் இந்த கோரிக்கையை ஏற்று நேற்று வியாழக்கிழமை காலை திருவளர்ச்சிபட்டி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்ததுடன் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் மேலும் விபரங்களை கேட்டறிந்தார் .

மேலும் இந்நிகழ்வில் நேரடி நெல் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் ஆனந்தி‍, பருவகால உதவுபவர் ஆனந்தகுமார் மற்றும் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன், மாரியப்பன் பாலமுருகன், ரெங்கர் உட்பட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் விவசாயிகள் என ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்‌.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.