திருச்சி: திராவிட பொங்கள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற சைக்கிள் போட்டியில் சைக்கிள் ஓட்டி கலக்கிய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.
திருச்சி மாநகர திமுக சார்பாக தலைமைக் கழக அறிவுறுத்தலின்படி
திராவிடப் பொங்கல்
சமூக நீதிக்கான திருவிழாக் கொண்டாட்டமாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு நிகழ்வாக மாபெரும் சைக்கிள் போட்டி மாநகர செயலாளர்
மு.மதிவாணன் தலைமையில் நடைபெற்றது.
தெற்கு மாவட்ட செயலாளர்,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் மகேஷ் பொய்யாமொழிபோட்டியை துவக்கி வைத்து பரிசுகள் வழங்கி சிறப்பித்தார் .
இந்நிகழ்வில் மாநகர நிர்வாகிகள் நூர்கான், .தமிழ்செல்வம் ,சந்திரமோகன்,
பொன்செல்லையா, சரோஜினி,
பகுதி கழகச் செயலாளர் பாபு மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பகுதி கழகச் செயலாளர்கள் வட்டக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சைக்கிள் போட்டிகள் கீழ்கண்ட வயதினருக்கு ஆண்களுக்கு 18 வயது முதல் 35 வயது வரை,
36 வயது முதல் 65 வயது வரை,
பெண்கள் 18 வயது முதல் 35 வயது வரை,
36 வயது முதல் 65 வயது வரை வயதிற்கு உட்பட்ட பிரிவினருக்கு போட்டிகள் நடைபெற்றது.

முதல் பரிசு ரூபாய் பத்தாயிரம் இரண்டாவது பரிசு ரூ.7500 மூன்றாவது பரிசு ரூ.5000 என போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

