திருச்சியில் பெருகிவரும் போதை மாத்திரை விற்பனை. 3 பேர் கைது
திருச்சி ஏர்போர்ட் பாரதி நகர் விஸ்தரிப்பு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் இந்திரா காந்தி தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது போதை மாத்திரை விற்பனை செய்த ஏர்போர்ட் காமராஜர் நகர் திலகர் தெருவை சேர்ந்த கார்த்திகேயன்
(வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதே போன்று திருச்சி கோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட இபி ரோடு சத்தியமூர்த்தி நகர் பகுதியில் போதை மாத்திரம் விற்பனை செய்த தாராநல்லூர் சேர்ந்த ஸ்ரீ ராம் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதேபோன்று திருச்சி தேவதானம் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்த கீழ தேவதானத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 19) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேற்கண்ட 3 பேரிடமிருந்து 45 போதை மாத்திரைகள்,ஊசிகள்,பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

திருச்சியில் சமீபத்தில் அடிக்கடி கோதை மாத்திரை விக்கும் நபர்கள் கைது செய்யப்பட்டு வருவது அதிகரித்து உள்ளது.

