2026 சட்டமன்ற தேர்தல் அதிமுக அறிக்கை தயாரிக்கும் குழுவினர் இன்று திருச்சியில் … அனைவரும் திரளாக பங்கேற்க மாவட்ட செயலாளர்கள் அழைப்பு.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் ஆகியோர் அறிக்கை:
அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர்
திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட ( திருச்சி, புதுக்கோட்டை, கரூர்,
அரியலூர், பெரம்பலூர்) ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள், தொழில் சார்ந்த சங்கங்களின் பிரதிநிதிகளிடம் கோரிக்கை மனுக்கள் பெரும் கருத்து கேட்பு ஆலோசனைக் கூட்டம் இன்று வியாழக்கிழமை 08/01/26 மாலை 4.00 மணி அளவில் திருச்சி மன்னார்புரம் அருகே அமைந்துள்ள வி.எஸ் மஹாலில் நடைபெற உள்ளது..
கோரிக்கை மனுக்களை பெறுபவர்கள்.
சட்டமன்ற உறுப்பினர் நத்தம் இரா. விசுவநாதன்
கழக துணைப் பொதுச் செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.
சி. பொன்னையன்
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் கழக செய்தித் தொடர்பாளர், முன்னாள் அமைச்சர்.
சட்டமன்ற உறுப்பினர் முனைவர் பொள்ளாச்சி ஜெயராமன்
கழக தேர்தல் பிரிவுச் செயலாளர், திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.
டி. ஜெயக்குமார்
கழக அமைப்புச் செயலாளர், வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.
சி.வி.சண்முகம்,
கழக அமைப்புச் செயலாளர், விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.
செ. செம்மலை
கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.
பா. வளர்மதி,
கழக மகளிர் அணிச் செயலாளர், கழக செய்தித் தொடர்பாளர், முன்னாள் அமைச்சர்.
ஓ.எஸ்.மணியன்,
கழக அமைப்புச் செயலாளர், நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.
சட்டமன்ற உறுப்பினர் உதயகுமார், கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர்.
முனைவர் எஸ்.எஸ். வைகைச்செல்வன் அவர்கள்
கழக இலக்கிய அணிச் செயலாளர், கழக செய்தித் தொடர்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.
அது சமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி, மாநகராட்சி கவுன்சிலர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்..
திருச்சி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

