Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவில் போலி டிக்கெட் அடித்து பல லட்சம் சம்பாதித்த கோயில் ஊழியரை கண்டுகொள்ளாத காவல்துறை.நடவடிக்கை எடுப்பாரா போலீஸ் கமிஷனர் ?

0

'- Advertisement -

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த டிசம்பர் 30ஆம் தேதி ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது

அதற்கு முதல் நாள் 29ஆம் தேதி இரவு 11 மணி முதல் பரமபத வாசலை

தரிசிக்க பக்தர்கள் கோயில் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

கையில் எழுதப்பட்ட போலீ டிக்கெட்

 

ரூ 4000 /- கட்டணம், ரூ700/- கட்டணம் மற்றும் உபயதாரர்கள் பாஸ் உள்ளவர்கள் என பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

 

அப்பொழுது ரூ 700/ கட்டண டிக்கெட்டை இரண்டு இடத்தில் ஸ்கேன் செய்து பார்த்த போது 21 பேர் டூப்ளிகேட் டிக்கெட்டுடன் உள்ளே செல்ல முயன்ற போது பிடிபட்டு வெளியே திருப்பி அனுப்பப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் ஆந்திர மாநில பக்தர்கள் .

 

அவர்களிடம் காவல்துறையினர் விசாரித்த பொழுது ஸ்ரீரங்கத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கொடுத்தார் என்று கூறியுள்ளார்கள் .

அந்த தொழிலதிபரிடம் ஸ்ரீரங்கம் காவல்துறையினர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட கேட்ட பொழுது எனக்கு கோவில் பணியாளர் ஒருவர் இந்த டிக்கெட்டை கொடுத்ததாகவும் வேறு எதுவும் எனக்கு தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அந்த தொழில் அதிபர் அந்த ஸ்ரீரங்கம் கோவில் பணியாளர் தொழில் அதிபரின் வீட்டில் கொண்டு போய் டூப்ளிகேட் டிக்கெட் கொடுக்கும் போது அவர் வீட்டில் உள்ள CCTV கேமிராவில் பதிவான வீடியோ – பதிவை போலீசருக்கு கொடுத்து விட்டார் என கூறப்படுகிறது.

 

அதன் பிறகும் அந்த கோயில் பணியாளர் மீது காவல்துறை இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

 

அந்த கோயில் பணியாளரின் பெயர் குண்டு சங்கர் என்கிற ரோபோ சங்கர் என சகா ஊழியர்கள் கூறுகின்றனர்.

 

போலி டிக்கெட் அடுத்து பல லட்சம் முறைகேடாக சம்பாதித்த கோவில் ஊழியர் சங்கர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் தகுந்த ஆதாரம் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் வேதனையில் கூறுகின்றனர்

.இதுகுறித்து முறையான விசாரணை நடத்தி காவல்துறை ஆணையர் காமினி நடவடிக்கை எடுப்பாரா என்பதே அரங்கநாதன் பக்தர்களின் எதிர்பார்ப்பு.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.