அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா கொடுத்துள்ளார் தமிழக முதல்வர் . அதிமுக திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் அறிக்கை.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து அரசு ஊழியர்களுக்காக தமிழக முதல்வர் வெளியீட்டு உள்ள பெண்கள் குறித்த அறிவிப்பு வெறும் கண்துடைப்பே.திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளரும்,உன்னால் திருச்சி மாநகராட்சி துணை மேருமான ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசு ஊழியர்களின் மாதாந்திர சம்பளத்தில் 10% பிடித்தம் செய்யப்பட்டு, ஓய்வு பெறும் போது பென்ஷன் வழங்கப்படும்.
CPS ஊழியர், பணி ஓய்வு பெறும் போது.. நாம் செலுத்திய 10% அரசு செலுத்திய 10% இதற்கு வட்டி 8% எல்லாம் சேர்த்து, சுமாரா ரூபாய் ஒரு கோடி கையில் வாங்கிக் கொண்டு போகலாம் என்ற நிலை இனி இல்லை.
தமிழ்நாடு அரசு சிறப்பு பென்ஷன் திட்டத்தின் படி,
60 வயதில் ஓய்வு பெற்ற ஒருவர் 61ம் வயதில் இறந்தால் அந்த ஓராண்டில் சுமாராக 6 லட்சம் (மாதம் 1 லட்சம் என வைத்துக் கொண்டால்) பென்ஷன் வாங்கி இருப்பார்.
பழைய CPS திட்டத்தில் நீடித்திருந்தால் ஒரு கோடி ரூபாய் கையில் வைத்திருக்கலாம்.
உங்களை எல்லாம் ஏமாற்றுவது மிகவும் எளிது.
அரசு ஊழியர்களின் பனிக்காலத்தில் சம்பளத்தில் 10% மட்டுமே பிடித்தால் அரசு பங்களிப்பு + வட்டியுடன் ஒரு கோடி ரூபாய் வரும். ஒரு கோடி ரூபாய் அரசு வைத்துக் கொண்டு மாதம் ஒரு லட்சம் பென்ஷன் தரும். இது விபூதி அடிக்கும் வேலை.
ஒவ்வொரு ஊழியரும் CPS Account slip ஐ வச்சுக்கிட்டு, இவ்வளவு பணம் சேர்ந்துருக்கு, அவ்வளவு பணம் சேர்ந்துருக்கு… ஓய்வு பெறும் போது லம்ப்பா கிடைக்கும் என்று இனிமேல் உதார் விட முடியாது .
60 ம் வயதில் ஓய்வு பெற்று, பெரும்பாலானவர்கள், அடுத்த 10 ஆண்டுகளில் மண்டையை போட்டு விடுவார்கள். எனவே அரசுக்கு கொழுத்த லாபம் வரும். இது IAS படிச்சவனுக்கு தெரியாதா ?
இப்பவும்,அரசு ஊழியர்களுக்கு CPS போதும்; அரசு தரும் பென்ஷன் வேண்டாம் என்று முடிவு எடுக்க ஒரு ஆப்ஷன் கொடுத்தால் CPS – ஐ தேர்ந்தெடுப்பவன் தான் புத்திசாலி.
இன்று வரை ஊழியர்கள் CPS க்கு கட்டிய சந்தா தொகையை, அப்படியே GPF அக்கவுண்டில் மாற்றி விடுகிறேன். அதற்குரிய வட்டியும் கணக்கில் சேர்த்து விடுகிறேன். அரசாங்கம் போட்ட காண்ட்ரிபியூஷனை அரசாங்கமே எடுத்துக் கொள்ளும். என்று சொல்லி, இதே பென்சன் ஸ்கீம் அறிவித்திருந்தால், சங்கங்கள் ஜெயித்ததாக அர்த்தம்.
இப்போ உங்களுக்கு நேந்திரம் வாழைப்பழத்தை சாலட் போட்டு கொடுத்திருக்காங்க என்று தான் எனக்கு தோன்றுகிறது.
உங்க பணத்தை அரசாங்கம் தன் கணக்குக்கு மாற்றி விடும். அதிலிருந்து மகளிர் உரிமைத்தொகை, இலவச பேருந்து போன்றவைக்கு அப்பணம் செலவிடப்படும்.
100% ரிசல்ட், ஆவரேஜ் மார்க் பிக்கப், இல்லம் தேடி கல்வி, திறன்… இப்படி புதுசு புதுசா 10 ஸ்கீம் கொண்டு வந்து பிரஷர் ஏத்தினம்னா சர்வீஸ்லயே பாதிப்பேர் செத்துப் போயிருவான். பென்ஷன் தரத் தேவை இல்லை. நேரடியா ஃபேமிலி பென்ஷனை கொடுத்து விடலாம். அரசுக்கு ஆயிரம் கோடி ரூபாய் லாபம்.
எலிப் பொறியில் மசால் வடை வைச்சாச்சு. ஆபத்தை அறியாமல் எலி வந்து கடிச்சிருச்சு. இனி ஊர்ல இருக்குறவன் எல்லாம் ‘இவருக்கென்னப்பா பென்ஷன் வந்துருச்சு’ என்று வயிறு எரிஞ்சு பேசுவானுங்க. வரவிருந்த ஒரு கோடியை விட்டுட்டு, கடைசியா வாங்குன Basic pay ல, பாதியை அதாவது 50,000 ஐ பென்ஷன்கற பெயரில் வாங்கனும். பணி ஓய்வு பெற்று 20 ஆண்டுகள் உயிரோடு இருந்தால் அசல் கிடைக்கும்.
ரூபாய் ஒரு கோடியை வங்கியில் டெபாசிட் செய்தாலே ஆண்டுக்கு 9 லட்சம் வருமானம். வாங்க போற பென்ஷன் என்பது வட்டி மட்டுமே. அசல்?….
அரசு ஊழியரிடம் ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு, அதற்கு மாதம் ஒரு லட்ச ரூபாய் வட்டி அரசு தரும். அந்த அரசு ஊழியர் இறந்த பிறகு அவருடைய மனைவிக்கு அதில் 60% தரும். அவருடைய மனைவியும் இறந்த பிறகு அரசு அப்படியே அந்த ஒரு கோடி ரூபாயை ஆட்டைய போட்டுவிடும். அரசு ஊழியரின் மனைவி அரசு ஊழியருக்கு முன்பே இறந்துவிட்டால் நிலைமை இன்னும் மோசம்.
இதுதான் புதிய பென்சன் திட்டத்தின் சிறப்பு திருநெல்வேலி அல்வா. இதற்காகத்தான், அரசுக்கு ஆதரவாக, அரசின் வருமானத்தை உயர்த்த, சங்கங்கள் இதுநாள் வரை நடத்திய நாடகம். இப்ப அதிருப்தியில் இருந்த அரசு ஊழியர்கள், அரசுக்கு ஆதரவாக திருப்பியதற்கான சன்மானத்தோடு, நன்றி அறிவிப்பு கூட்டங்கள் இனிதே நடக்கும்.
சங்கங்களை நம்பிய ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் சவப்பெட்டியில் அடைத்த தினம் நேற்று .
அரசு ஊழியர்களின் வாழ்க்கையில் இது ஒரு கருப்பு அறிவிப்பு.. என்ன திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

