தமிழகத்தில் மகளிர்களுக்கான அற்புத திட்டங்கள் எல்லாம் கானல் நீராகின்றன.அதற்கு ஒரே வழி இதுதான்… மநீம திருச்சி மாவட்ட செயலாளர் கிஷோர் குமார்.
மக்கள் நீதி மய்ய திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிகரெட்டுக்கு விதிப்படயிருக்கிற வரியை போன்று_தமிழக மதுபானத்திற்கும் வரியை உயர்த்துமா தமிழக அரசு…??
அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியம் தொடர்பான திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வைக்க, அரசு ஊழியர்களுக்கு என சங்கங்கள் உண்டு. போராட்ட யுக்தி உண்டு, படை பலம் உண்டு. அதனால் அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.
ஆனால் தாய் தமிழகத்தில் ஆண்டுக்கு 500-மதுபான கடைகள் மூடப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை முன்வைத்து தமிழகத்தில் யார் போராடுவார்கள்……?
இதனால் இந்த சமுகம் சார்ந்த பிரதான கோரிக்கை கிணற்றில் போட்ட கல் மட்டுமல்ல. எலைட் மதுபான கடைகள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளன.
தமிழக பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு கலைஞர் மாதாந்திர ஊக்கத்தொகை தொடங்கி மகளிர் இலவச பேருந்து, கல்லூரி மாணவிகளுக்கான ஊக்கத்தொகை என எண்ணிலடங்கா பல கோடி மதிப்பிலான ஆக்கபூர்வமான பல திட்டத்தை தொடங்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
ஆனால் இந்த அற்புத திட்டங்கள் எல்லாம் தமிழகத்தில் விற்கப்படும் மதுபானத்தினால் சிரழியும் அந்த மகளிரின் சகோதரனும், கணவரும், தந்தையும் குடித்து குடும்பமே நிற்கெதியாக நிற்கிறது. இதனால் தமிழக அரசு பெண்களின் சுயமுன்னேற்றத்திற்கு தமிழக அரசு ஏற்படுத்துகிற திட்டங்கள் கானல் நீராகின்றன.
மேலும் தற்பொழுது மத்திய அரசு வரும் பிப்ரவரி முதல் சிகரெட்டிற்கான வரியை 40% வரை உயர்த்த உள்ளது. இதன் காரணமாக ரூ.18/-க்கு விற்கப்படும் சிகரெட்டின் விலை ரூ.70/- விலை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
என்னதான் டிவியிலும், சினிமா தியேட்டரிலும் மாஞ்சி, மாஞ்சு போதை பொருள் பற்றி விழிப்புணர்வை ஒளிபரப்பினாலும் திருந்துபவர்கள் குறைவு தான். அதே விலையேற்றம் என்று வந்தால் தினம்தோறும் நான்கு சிகரெட் குடிப்பவர்கள் ஒரு சிகரெட்டாக குறைய வாய்ப்புள்ளது.
எனவே தாய் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் தமிழக முதல்வர் அவர்கள் மது என்ற அரக்கனை தமிழகத்திலிருந்து நிரந்தரமாக விரட்ட பூரண மதுவிலக்குக்கு மாற்றாக மதுவிற்கான வரியை மாநில அரசு 50% வரை உயர்த்தி_அரசுக்கான வரி வருவாயை உயர்த்துவதுடன், மதுவிற்கு அடிமை ஆவர்களின் எண்ணிக்கையை தமிழத்தில் குறைக்க மக்கள் நீதி மய்யம் கட்சி, திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம்.
என வக்கீல்.S.R.கிஷோர்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
(கிஷோர் குமார் : செல்: 98659 62927. )

