Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் பரிந்துரையில் ரூ.3 கோடி செலவில் திருச்சி சூரியூரில் கட்டப்பட்ட ஜல்லிக்கட்டு மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைக்கிறார்.

0

'- Advertisement -

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டு பொங்கல் அன்று ஸ்ரீநற்கடல்குடி கருப்பணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இது ஒவ்வொரு ஆண்டும் திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு ஆகும். இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகளவில் காளைகள் அழைத்து வரப்படும். வீரர்களும் குவிவார்கள். இத்தகைய பிரசித்தி பெற்ற சூரியூரில் ரூ.3 கோடியில் பிரமாண்டமான ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு மட்டுமின்றி கால்பந்து, வாலிபால் உள்ளிட்ட மற்ற விளையாட்டுகளையும் விளையாடும் வகையில் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு மைதானத்தில் வாடிவாசலுக்கு இருபுறமும் 810 பேர் உட்காரும் வகையில் கேலரி கட்டப்பட்டுள்ளது.ஒரு பகுதி பொதுமக்களுக்கு மற்றொரு பகுதி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு அடுத்தபடியாக 2வது ஜல்லிக்கட்டு மைதானமாக இந்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

 

இந்த புதிய ஜல்லிக்கட்டு அரங்கம், இப்பகுதியில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை மேலும் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடத்த வழிவகுக்கும். இது உள்ளூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவும் இருந்து வந்துள்ளது. இந்த அரங்கம், ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் ஒரு சிறந்த அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது இப்பகுதியின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் மேம்படுத்தும் ஒரு முக்கிய அடையாளமாகவும் மாறும். இந்த அரங்கம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் ஒரு முக்கிய திட்டமாகும். இது விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிப்பதோடு, இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ், சுமார் ₹3 கோடி மதிப்பீட்டில் இந்த அரங்கம் கட்டப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகளை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் கோரிக்கையின் பேரில் மாநில அரசு இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிரதிநிதித்துவப்படுத்தும் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் இந்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.இதனால் திருவெறும்பு தொகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் இந்த பணியை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இந்த மைதானத்தை வரும் பொங்கலன்று (15ம் தேதி) மாலை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நேற்று நடப்பட்டு அதற்கான பணிகளும் துவங்கி உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.