யார் அந்த சார்? திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் பதாகைகள் ஏந்தி மீண்டும் கேள்வி.
தமிழக அரசுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் யார் அந்த சார் என்ற முழக்கத்தை அதிமுக முன்வைத்து ஒரு வருடம் ஆகிறது.
கடந்த ஒரு வருடமாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது.
மேலும் திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அம்மா பேரவை மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் யார் அந்த சார்? என போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

பாலியல் புகாரில் சிக்கிய மாணவி அளித்த புகாரில் யார் அந்த சார் என்ற கேள்வி எழுந்து ஒரு வருடம் ஆனதை தொடர்ந்து இன்று திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் மு பரஞ்சோதி தலைமையில் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் எஸ்.
திருப்புகழ்,
செல்லத்துரை மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஏவூர் நாகராஜன் ஆகியோர் பதாகைகள் ஏந்தி மீண்டும் கேள்வி எழுப்பினர்.

