திருச்சியில் கிளப் ராயல் 7 மைதானத்தில் பிக்கில் பால் விளையாட்டு போட்டிகள் ஆரம்பம்.அமெரிக்கா பயிற்சியாளர் கோச்சிங்கில் சேர தொடர்பு எண் …
திருச்சியில் கிளப் ராயல் 7 மைதானத்தில் பிக்கில் பால் விளையாட்டு போட்டிகள் ஆரம்பம்.
பிக்கில் பால் விளையாட்டு மைதானம் திருச்சி தென்னூர் அண்ணா நகர் உக்கிரகாளியம்மன் கோவில் பின்புறத்தில் கிளப் ராயல் 7 என்ற பெயரில் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

பிக்கில் பால் விளையாட்டு மைதானம் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்காக துவங்கப்பட்ட இந்த மைதானத்தை ராயல் பேர்ல் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜானகிராம் தனது முயற்சியால் உருவாக்கி உள்ளார்.
மேலும் டாக்டர் ஜானகிராமன் கூறுகையில்:
எனக்கு உடல் நலம் பராமரிப்பது ரொம்ப பிடிக்கும். அந்த நோக்கத்தோடு திருச்சியில் பெரிய அளவில் அக்குவா புல் தரை மைதானம் லிங்கநகர் பகுதியில் ஆரம்பித்தேன்.தற்போது தமிழகமெங்கும் பிக்கில் பால் விளையாட்டு மக்களிடையே மிக பிரபலமான விளையாட்டாக மாறி வருகிறது, திருச்சி யில் முதன் முதலில் பிக்கில் பால் கோர்ட் டாக்டர் வருண் பிரசன்னா தான் ஆரம்பித்து வைத்தார். அந்த மைதானத்தில் நான் விளையாடி உள்ளேன், இந்த பிக்கில் பால் விளையாட்டிற்கு தந்தையாக முரளிதரனும், ராயஸ்டன் ஆகியோர் திகழ்கின்றனர், சுமார் 2000 சதுர அடி பரப்பளவில் இந்த பிக்கில் பால் மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது, 
இந்த மைதானத்தில் சிறப்பு என்னவென்றால் ரோபோ இருக்கிறது. மைதானத்தில் கேண்டின் மற்றும் விளையாடுவதை கேமராவில் பார்க்கக்கூடிய வசதியும் செய்யப்பட்டுள்ளது, இந்த பிக்கில் பால் விளையாட்டு என்பது அனைத்து வயதினரும் விளையாடக்கூடிய ஒரு விளையாட்டாக இருக்கின்றது, ஐந்து வயது குழந்தைகள் முதல் 80 வயது முதியவர் வரை இந்த பிக்கில் பால் விளையாட்டு விளையாடலாம், வெளிநாடுகளில் இந்த பிக்கில் பால் விளையாட்டு அதிகளவில் பெண்கள் தான் விளையாடி வருகின்றனர் .
இந்த மைதானத்தில் ஜனவரி 3 ம் தேதி மற்றும் 4 ம் தேதி களில் பிக்கில் பால் போட்டிகள் நடைபெற இருக்கிறது.இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்புவார்கள் நேரிடையாக தொடர்பு கொள்ளலாம். இந்த போட்டிக்கு அமெரிக்காவிலிருந்து பயிற்சியாளர் ராய்ஸ்டன் கோச்சிங்கை வழி நடத்துகிறார் என்று கூறினார்.
கோச்சிங் மற்றும் தொடர்புக்கு மேக் மில்லன் செல் எண் : 99940 75321

