யார் அந்த சார்? முதலாம் ஆண்டு நினைவு (அஞ்சலி ) நாள் திருச்சி அதிமுக தெற்கு மாவட்டத்தில் அனுசரிப்பு.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து யார் அந்த சார்? என்ற முழக்கத்துடன்
அதிமுக பொதுச் செயலாளர் தலைமையில் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. FIR வெளியான “யார் அந்த சார்?” என்ற கேள்வியானது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவம் அரங்கேறி ஒரு வருடம் கடந்த நிலையில் “யார் அந்த சார்?” என்ற கேள்விக்கு இன்று வரை விடை கிடைக்காமல் உள்ளது. அதனை குறிக்கும் விதமாக ( எந்த நடவடிக்கையும் இல்லாமல் ஒருவர் இறந்தது போன்று கிடப்பில் கிடக்கும் வழக்கு நினைவு நாளாக) திருச்சி சுப்பிரமணியபுரம் அருகே உள்ள அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான, ப.குமார் தலைமையில், தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் “யார் அந்த சார்?” கண்டன கேள்விகளுடன் கூடிய பதாகைகளை ஏந்தி கேள்வி எழுப்பினர்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் எம்.சுரேஷ்குமார், திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் புள்ளம்பாடி எஸ்.பழனிச்சாமி, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் டி.காசிராமன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

