Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி முன்னாள் பிஆர்ஓ (ஏடி) சிங்காரம் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டதன் பின்னணி

0

'- Advertisement -

 

மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி என்பவரின் பணி மாவட்டத்தின் சார்பில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சிகள் பற்றி நிருபர்களுக்கு தகவல் தருவதும் நடந்து முடிந்த நிகழ்ச்சிகள் பற்றியும் மாவட்ட நிருபர்களுக்கு , பத்திரிக்கை அலுவலகங்களுக்கு இமெயில் செய்தியை அனுப்பி பொது மக்களிடம் அரசு சார்பில் நடைபெறும் அனைத்து செய்தியும் கொண்டு சேர்க்கும் புனிதமான பணி ஆகும்.

திருச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை உதவி இயக்குனராக இருந்து தற்போது காத்திருப்பு பட்டியலில் உள்ளவர் சிங்காரம் ஆவார்.

2004இல் அதிமுக ஆட்சியின்போது பணியில் சேர்ந்தவர் சிங்காரம். 2018 திருச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக பதவி ஏற்றார் துண்டு 2020இல் செய்தி மக்கள் தொடர்பு துறை உதவி இயக்குனராக இதே திருச்சியில் பணியினை தொடர்ந்தார் (இவரது உறவினர் மாநில செய்தித் துறை இயக்குனராக இருந்த சங்கர் மூலமாக)

உதவி இயக்குனராக பதவி ஏற்ற பின்பு இவர் அரசு நிகழ்ச்சிகளில் அவ்வளவாக கலந்து கொள்வதில்லை, அலுவலக புகைப்பட கலைஞரை அனுப்பி படம் எடுத்து வர சொல்லுவார்.

செய்தியாளர்கள் பெயரை கூறி பல அரசு துறை அதிகாரிகளிடமும் பல லட்சம் பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.

Suresh

சிங்காரம் பற்றி ஏதாவது செய்தி வெளியிட்டார் அந்த நிருபர் மற்றும் அவருடன் பழகும் ஒருவரையும் அவர் மதிக்க மாட்டார். உதாரணமாக பஸ் பாஸ்,மாவட்ட அடையாள அட்டை, வாகன ஸ்டிக்கர் போன்றவற்றை வழங்க மாட்டார்.மாவட்ட ஆட்சியர் கூறினால் கூட இவர்கள் அங்கீகாரம் அற்ற பத்திரிகைகள் எனக் கூறி மறுத்து விடுவார்.

இதன் காரணமாக தான் தற்போது தமிழக அரசு கொரோனா நிவாரண நிதியாக பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கிய ரூபாய் 5000 பல நிருபர்களும் பெற முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

பத்திரிகையாளர்களுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் மனைக்கு கூட பரிந்துரை செய்ய பணம் கேட்டதாக தகவல் .

இவர் திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து உதவி இயக்குனராக பணிபுரிய உதவிய செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் சங்கர் அவர்களின் மாமனார் கு.பா.கிருஷ்ணன் அவர்களுக்கு மறைமுகமாக தேர்தல் ஆதரவு அளித்தார். கு.பா கிருஷ்ணன் பிரச்சாரம் செய்யும் புகைப்படங்களை தனது சொந்த மெயிலில் இருந்து அவருக்கு வேண்டிய நிருபர்களுக்கு அனுப்பி உள்ளார் என்பதை கூறித்து அப்போது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

ஆட்சி மாறிய பின்பும் தொடர்ந்து இவர் அதிமுகவுக்கு சாதகமாக செயல்பட்டு வந்தார் என கூறப்படுகிறது.

சிறு பத்திரிக்கையாளர்களை மதிப்பது இல்லை, அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததினால் தான் சிங்காரம் தற்போது காத்திருப்பு பட்டியலில் உள்ளார் என கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.