திருச்சி: எம்ஜிஆரின் 38 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக மாவட்ட செயலாளர் குமார் அஞ்சலி செலுத்தி அன்னதானம் வழங்கினார்.
மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரின் 38 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு
திருச்சிஅதிமுக புறநகர் தெற்கு மாவட்ட சார்பில் பெல் அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு..
திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் அவர்கள் மலர் தூவி மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும் தொண்டர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் , ஒன்றிய கழக செயலாளர்கள் இராவணன், SKD.கார்த்திக், பகுதி கழக செயலாளர் எம்.பாலசுப்பிரமணியன் , எஸ்.பாஸ்கர் (எ) கோபால்ராஜ், ஏ,தண்டபாணி, பேரூர் கழக செயலாளர் பி.முத்துக்குமார், துவாக்குடி நகர கழகச் செயலாளர் எஸ்.பி.பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் சாந்தி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ராஜமணிகண்டன்,
மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழகங்களை சார்ந்த நிர்வாகிகள் கிளை, வட்ட, வார்டு, கழக நிர்வாகிகள், சார்பு அணியினர் மற்றும் கழக செயல் வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்று நினைவஞ்சலி செலுத்தினார்கள்.

