Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ஓடும் பஸ்சில் கண்டக்டர் திடீர் சாவு

0

'- Advertisement -

திருச்சியில் ஓடும் பஸ்சில் கண்டக்டர் திடீர் சாவு

செசன்ஸ் கோர்ட் போலீசார் விசாரணை .

நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 50) இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்சியில் இருந்து திண்டுக்கல் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது தீரன் நகர் பஸ் நிறுத்தம் அருகில் வரும் பொழுது அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவ குழுவினர் கண்டக்டர் சிவக்குமார் இறந்து விட்டதாக கூறினார்.

இதையடுத்து சிவகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.