Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் முத்து செல்வத்திற்கு எச்சரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின் . கை விரித்த அமைச்சர் கே என் நேரு .

0

'- Advertisement -

தமிழகம் முழுவதிலும் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகளை ‘உடன் பிறப்பே வா’ நிகழ்ச்சி மூலம் நேரில் சந்தித்து வருகிறார் தி.மு.க.தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின். இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டத்தில் ஒ.செ. ஒருவரின் நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது. அதற்கடுத்து திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் வடக்கு ஒன்றியச் செயலாளர் முத்துத் செல்வத்தை முதல்வர் எச்சரித்து அனுப்பிய விவகாரம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணா அறிவாலயத்தில் நடந்த ‘உடன் பிறப்பே வா’ நிகழ்ச்சியில் உப்பிலியபுரம் ஒன்றியச் செயலாளர்களான என்.அசோக், முத்துச் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது அசோக்கிடம் முதல்வர், ‘இன்னும் சிறப்பாக உங்கள் பணி இருக்கவேண்டும். மூன்றாவது முறையாக துறையூர் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெறவேண்டும். அதற்கான வேலைகளைப் போய் பாருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.

 

அதற்கடுத்து சென்ற உப்பிலியபுரம் வடக்கு ஒன்றியச் செயலாளர் என்.முத்துச் செல்வத்திடம், ‘நீங்கள் எந்தவொரு கான்ட்டிராக்ட் வேலைகளையும் யாருக்கும் பிரித்துக்கொடுப்பது இல்லையாமே? நீங்களே எடுத்து செய்துகொள்கிறீர்களாமே?’ என்றவர், ‘காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்கிறீர்களாமே? உங்கள் மீது உப்பிலியபுரம் காவல்நிலையத்தில் பல வழக்குப் பதிவுகள் இருக்கிறதாமே? ஒழுங்காக வேலையைப் பாருங்கள்… இதே நிலை நீடித்தால்…” என எச்சரித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதனால் முகம் வியர்த்துப்போய் வெளியே வந்திருக்கிறார் என்.முத்துச்செல்வம்.

 

முதல்வர் ஸ்டாலினின் எச்சரிக்கை குறித்து அண்ணா அறிவாலயத்தில் உள்ள சீனியர்கள் பிறர் கூறும்போது :-

 

”முதல்வரிடம் வந்து உட்காரும் நிர்வாகிகளைப் பற்றிய உளவுத்துறை ரிப்போர்ட்டை கையில் வைத்துக்கொண்டுதான் முதல்வர் பேசுகிறார். உப்பிலியபுரம் ஒன்றியச் செயலாளர் முத்துச் செல்வம் அந்தப் பகுதியில் யாரையும் சம்பாதிக்கவிடாமல், தான் ஒருவரே அனைத்து காண்டிராக்ட்களையும் எடுத்து சம்பாதித்து வருகிறார். கட்சிப் பணியை தவிர்த்து மற்ற எல்லா வேலைகளையும் செய்துவருகிறார். இது தொடர்பாக பல புகார்கள் அறிவாலயத்திற்கு வந்துகொண்டிருந்தது. இது பற்றி உளவுத்துறையிடம் விசாரித்த போது, ‘அவர்களும் உண்மைதான்’ என்று ரிப்போர்ட் கொடுத்துள்ளனர்.

 

ஏற்கனவே, திருச்சி மாவட்ட அமைச்சர் கே.என்.நேருவும் ‘டேய்… தப்பு எதுவும் செய்யாதீர்கள்… அப்படி செய்தால் என்னால் காப்பாற்ற முடியாது. ‘மேலிடத்தில்’ இருந்து நேரடியாக கண்காணித்து வருகிறார்கள்’ என்று சொல்லியும் முத்துச் செல்வம் திருந்தவில்லை. அதனால்தான் முதல்வர் எச்சரித்தார்” என்றனர்.

 

முதல்வரின் எச்சரிக்கை பற்றி உப்பிலியபுரத்தில் உள்ள நடுநிலையான உடன் பிறப்புக்கள், ”திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியத்தில் தெற்கு ஒன்றியச் செயலாளராக இருப்பவர் என்.அசோக். சமீபத்தில்தான் ஒன்றியச் செயலாளராக நியமிக்கப்பட்டவர். இவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. ஆனால், உப்பிலியபுரம் வடக்கு ஒன்றியச் செயலாளர் முத்துச் செல்வம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.

 

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இவரது சொந்த ஊரான ஓ.கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஏரி, ஒக்கரை, பாதர்பேட்டை, சோபனபுரம் என சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏரிகளில் கிராவல் மண்ணை கொள்ளை அடித்தார். இதனை தட்டிக்கேட்ட ஒருவரை சரமாரியாக தாக்கினார். இந்த விவகாரம் தொடர்பாக காவல்நிலையத்தில் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 

தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒன்றியத்தில் உள்ள அனைத்து காண்ட்ராக்ட்களையும் இவரே எடுத்து செய்கிறார். கட்சியில் உள்ள மற்ற நிர்வாகிகளுக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடுவது கிடையாது. இவருக்கு பினாமியாக பாலு என்கிற பாலகுமார் இருக்கிறார். இவரது பெயரில்தான் சில காண்டிராக்ட்களை எடுத்து செய்கிறார். தவிர, பல்வேறு இடங்களில் பாலகுமார் பெயரில் நிலங்களையும் வாங்கிக் குவித்திருக்கிறார். இவருக்கு பினாமியான பிறகு பாலகுமாரும் தனது டிராக்டர்கள் மூலம் இரவு நேரங்களில் அனுமதியின்றியும், ஆவணங்கள் இன்றியும் கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்.

 

தவிர, முத்துச் செல்வத்திற்கு பினாமியான பிறகு தனது பெயருக்கு முன்னாள் ‘பட்டாசு’ பாலு, ‘பஞ்சாயத்து’ பாலு என அடைமொழியை வைத்துக்கொண்டார். இவரை பிடித்து விசாரித்தாலே முத்து செல்வத்தின் ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்துவிடும். தவிர, சொந்த ஊருக்கு முத்துச் செல்வம் செய்த ஒரு துரோகத்தை உதாரணத்திற்கு சொல்வோம்.

 

தனது உறவினர் ஒருவருக்காக மேற்கு வீதியில் பாதாள சாக்கடையை கட்டியிருக்கிறார். அந்த பாதாள சாக்கடையில் வரும் கழிவுநீரை தெப்பக்குளத்திற்குள் கொண்டு விட்டிருக்கிறார். அந்தக் காலத்தில் கிராமங்களில் நல்ல குடிநீர் வேண்டும் என்பதற்காக தெப்பக்குளங்களை முன்னோர்கள் கட்டி வைத்தார்கள். ஆனால், அந்தத் தெப்பக்குளத்தில் கழிவுநீரை கலக்கும்படி செய்திருக்கிறார் முத்துச் செல்வம். இது இன்னும் அப்படியேத்தான் இருக்கிறது. இந்த பாதாள சாக்கடை மூடாமல் இருப்பதால் ஆடு, மாடுகள் உள்ளே விழுந்துவிடுகின்றனர். இவரை எதிர்த்து கேள்விக் கேட்பவர்களை ‘சரிகட்டி’ தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்கிறார். இது ஒரு உதாரணம்தான் என கூறப்படுகிறது .

 

தற்போது, திருச்சி மாவட்டம் மங்கப்பட்டியில் ‘சமத்துவபுரம்’ குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. இதிலும் காண்டிராக்ட் பணியை பினாமி பெயரில் எடுத்து செய்துவரும் முத்துச் செல்வம், தரமில்லாமல்தான் செய்திருக்கிறார். தவிர, தனக்கு வேண்டப்பட்ட சிலரை பயனாளிகள் லிஸ்டில் இணைத்திருக்கிறார்” என முத்துச் செல்வம் மீது குற்றச்சாட்டுகளை . அடுக்கி உள்ளனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.