திருச்சி கொட்டப்பட்டில் குடிப்பழக்கத்தால் குடும்ப தகராறில் மனைவியை பிரிந்து வாழ்ந்தவர் தற்கொலை .
திருச்சி பொன்மலை போலீஸ் சரகம் கொட்டப்பட்டு இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 47).குடிப்பழக்கம் உடையவர்.அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றதால் வீட்டில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
சமீப காலமாக தனது குடி பழக்கத்தால் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது உத்திரத்தில் மனைவியில் சேலையால் தூக்கு போட்டு ராமலிங்கம் தற்கொலை செய்து கொண்டார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து அவரது தாய் சுலோச்சனா அளித்த புகாரின் அடிப்படையில் பொன்மலை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

