திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தர கோரி இன்று பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து பாதிப்பு.
திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் இன்று சுரங்கப்பாதை அமைத்து தர கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில்
கடும் போக்குவரத்து பாதிப்பு.
திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சஞ்சீவி நகர் பகுதியில் நான்கு புறங்களில் இருந்தும் வாகனங்கள் வந்து செல்வதால் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
குறிப்பாக அரியமங்கலம், பனையக்குறிச்சி, சர்க்கார் பாளையம், வேங்கூர், கல்லணை உள்ளிட்ட இருபதுக்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் தங்களின் தேவைக்காக திருச்சி சென்னை பைபாஸ் காலையில் உள்ள சஞ்சீவி நகர் பகுதியில் கடந்து சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை பைபாஸ் சாலையில் அதிவேக வாகனங்களால் தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்தன.
இதனால் தங்கள் பகுதியில் பைபாஸ் சாலையை கடந்து செல்ல சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம் அமைத்து தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை ஈடுபட்டு வந்தனர்.
கடந்த ஜூன் மாதம் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் கொடுத்து உள்ளனர் .ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
இதற்கிடையே இன்று ரெண்டு லாரிகள் மோதி அப்பகுதியில் விபத்து ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த 20 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த கோட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தொடர்ந்து அதிகாரிகளை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமூக தீர்வு காண்பதாக காவல்துறையினர் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர் .
திருச்சி கிழக்கு தாசில்தார் விக்னேஸ்வரன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையின் உதவி பொறியாளர் அசோக்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது நான்கு மாதத்திற்குள் இதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

