கியூரிஸ் கேஸ்கேர் மற்றும் வேலன் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துமனை சார்பில் இலவச புற்றுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாமை டாக்டர் ராஜவேல் தொடங்கி வைத்தார் .
சுற்றுச் சூழல், பாஸ்ட் புட் கலாச்சாரம் காரணமாக தற்போது புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது – திருச்சியில் நடந்த இலவச புற்றுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாமில் மருத்துவர் ராஜவேல் பேச்சு.
கியூரிஸ் கேஸ்கேர் மற்றும் வேலன் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துமனை சார்பில் இலவச புற்றுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம் திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலை பள்ளியில் ஞாயிற்று கிழமை அன்று நடைபெற்றது.
கியூரிஸ் கேன்சர் கேர் மற்றும் வேலன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் நடந்த இலவச புற்றுநோய் கண்டறிதல் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாமை வேலன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜவேல் தொடங்கி வைத்தார். இம் முகாமில் டாக்டர்கள் தேம்பாவணி, விக்னேஸ்வர், ஜனார்த்தன், ராஜ்குமார் கலந்து கொண்டனர் .
வேலன் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜவேல் முகாமை தொடங்கி வைத்து பேசிய போது…, சுற்றுச் சூழல், பாஸ்ட் புட் கலாச் சாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை தற்போது கணிசமாக உயர்ந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சி அடையாத காலத்தில் புற்றுநோய் வந்தால் மரணம் என்ற நிலைமை தற்போது மாறி விட்டது. ஆனால் தற்போது மருத்துவ துறை சிறப்பான வளர்ச்சி அடைந்து இருப்பதால் புற்றுநோயை தொடக்கத்தில் கண்டறிந்து சிகிச்சை மேற் கொண்டால் குணப்படுத்தலாம்.
‘
புற்றுநோய் பாதித்தவர்கள் அச்சமின்றி பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ள முன் வர வேண்டும். கூரிஸ் கேன்சர்
கேர் மையத்துடன் வேலன் மருத்துவமனை, ஷாநவாஸ் மருத்துவமனை, டாக்டர் விஸ்வநாதன் மருத்துவமனை இணைந்து செயலாற்றும், என்றார்.
நிகழ்ச்சியில் ரவுண்ட் டேபிள் அமைப்பு சார்பில் இலவச பரிசோதனை கிட் வழங்கப்பட்டது.
வேலன் மருத்துவமனைனை இயக்குனர் தேம்பாவணி இந்த நிகழ்வுக்கு முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் பல்வேறு துறையை சேர்ந்த மருத்துவர்கள் விக்னேஸ்வர், ஜனார்த் தன், ராஜ்குமார், சித்ரா, சவுமியா, நவீன், ரவுண்ட் டேபிள் அமைப்பு சேர்மன்கள் கமல்தாஸ், திவ்யபிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ரத்த அழுத்தம், ரத்த பரிசோ தனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

