Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

துள்ளுவதோ இளமை படத்தில் நடிகர் தனுஷ் உடன் அறிமுகமான நடிகர் அபிநய் காலமானார். இறுதிச்சடங்கு செய்யக்கூட ஆள் இல்லாத சோகம்

0

'- Advertisement -

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் அபிநய், தற்போது உயிரிழந்திருப்பது ரசிகர்களையும் திரையுலகினரையும் பெரும் சாேகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

இந்த நிலையில், அவர் கடைசியாக பிரபலம் ஒருவரிடம் கேட்ட விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

தனுஷுக்கு தமிழ் திரையுலகில் முதல் படமாக இருந்தது, ‘துள்ளுவதோ இளமை’. கஸ்தூரி ராஜா இயக்கிய இந்த படம், தனுஷுக்கு மட்டுமல்ல, அதில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்த அபிநய்க்கும் முதல் படம்தான். இந்த படத்தின் மூலம் பிரபலமான இவர், தொடர்ந்து ஹீரோவாக ஜஞ்சன், சக்ஸஸ் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தார். ஒரு சில மலையாள படங்களிலும் அவ்வப்போது நடித்தார். சிங்கார சென்னை, தாஸ், ஆறுமுகம் உள்ளிட்ட படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்திருந்த இவர், என்றென்றும் புன்னகை படத்தில் குணச்சித்திர வேடங்களில் வந்திருக்கிறார். இதைத்தாண்டி கடைசியாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்திலும் நடித்தார்.

 

அபிநய் சில படங்களில் வில்லன் கதாப்பாத்திரங்களுக்கு வாய்ஸும் கொடுத்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இவர் எலும்பும் தோலுமாக இருக்கும் புகைப்படமும் வீடியோவும் வெளியானது. அதில், தனக்கு கல்லீரல் தொற்று நோய் ஏற்பட்டிருப்பதாகவும், இதற்கான சிகிச்சையை பெறுவதற்கு ரூ.28 லட்சத்திற்கும் மேல் செலவாகவும் எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தனக்கு உதவுமாறும் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, திரையுலகை சேர்ந்த பலர் அவருக்கு உதவ முன்வந்தனர்.

 

அபிநய், செப்டம்பர் 10ஆம் தேதியான இன்று அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. 44 வயதாகும் இவரது தந்தை-தாய் இருவருமே உயிரிழந்து விட்டனர். இவர், திருமணமும் செய்து கொள்ளவில்லை. எனவே, இவர் தனியாகவே வசித்து வந்தார். இவர் உயிரிழந்ததற்கு பிறகு, இவருக்கு இறுதி சடங்கு நடத்தக்கூட யாரும் இல்லையாம். பின்னர் திரைப்பட சங்கங்கள் முன்வந்து, இதனை நடத்தின.

 

நடிகர் அபிநய், தனது மருத்துவ செலவுக்கு நிதியுதவி தேவை என்று கேட்டபோது அவருக்கு உடனடியாக ஓடி வந்து உதவியவர், கேபிஒய் பாலா. இது குறித்து வெளியான வீடியோவில் கூட, நடிகர் அபிநய் அவரிடம் நெகிழ்ச்சியுடன் பேசியது இடம் பெற்றிருந்தது. இந்த நாளில் இருந்து இருவரும் அண்ணன்-தம்பி என்று நெருக்கமாகினர்.

 

அபிநய்க்கு KPY பாலாதான் வீடு எடுத்துகொடுத்து, மாத வாடகையை கட்டி வந்ததாக கூறப்படுகிறது. உயிரிழப்பதற்கு முந்தைய நாள் இரவு, அபிநய் பாலாவிடம் போன் செய்து பேசியுள்ளார். அப்போது இந்த மாத வாடகைக்கு பணம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். பாலாவும் அன்றிரவே அவருக்கு பணத்தை அனுப்பியிருக்கிறார். இரவு 11 மணி வரை இருவரும் உரையாடியதாக தெரிகிறது. இதையடுத்து, இன்று காலை அபிநய் இறந்து விட்டார் என்கிற செய்தி பாலாவை ஆடிப்போக செய்துள்ளது.

அபிநய், பாலாவை தம்பியாக பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் பாலா குறித்த ஒரு சர்ச்சை எழுந்த போது கூட, அவருக்கு ஆதரவாக பேசியிருந்தார். இப்போது அபிநய் இறந்த பிறகு தன்னை அவர் தம்பி என்று அழைத்த ஒரு காரணத்திற்காக தானே அவரது இறுதி சடங்கின் முழு பொறுப்பை பாலாவே பார்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.