Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அரசு மருத்துவமனை டிபி ஓபி வார்டுக்கு மூன்று மணி நேரம் தாமதமாக வரும் மருத்துவர் முத்துப்பாண்டி . பரிதவிக்கும் நோயாளிகள் . நடவடிக்கை எடுப்பாரா சுகாதாரத்துறை அமைச்சர் ?

0

'- Advertisement -

தமிழகத்தில் ஏழை மக்கள் பெரிதும் நம்பி இருப்பது அரசு மருத்துவமனைகளை தான் .

 

பணம் படைத்தவர்களுக்கு ஆங்காங்கே தனியார் மருத்துவமனைகள் பல செயல்பட்டு வருகின்றது ஆனால் சிறு காய்ச்சல் என்றாலும் பாம்பு கடி , தீக்காயம் , விஷம் குடித்தவர்கள் , பிரசவம் . சளி தொல்லை என அனைத்திற்கும் ஏழை மக்கள் உடனடியாக நாடி வருவது அரசு மருத்துவமனையை தான் .

 

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் திருச்சி மாநகர் மாவட்டம் மட்டுமில்லாமல் சுற்றுவட்டார கிராம பொதுமக்களும் தினமும் பல்லாயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர் . பல நூற்றுக்கணக்கான உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்நிலையில் தினமும் அரசு மருத்துவமனையில் ஓபி (out Patient) டிபி, காது முக்கு தொண்டை, மூளை நரம்பியல் உள்ளிட்ட பல பிரிவுகளில் காலை 7:00 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெறும்.

 

இதில் அரசு மருத்துவமனை வார்டு 60 டிபி நோயாளிகளுக்கான அவுட் பேஷண்ட் வார்டு ஆகும் . இங்கு தினதோறும் பல நூறு பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர் .

 

தற்போது இங்கு மருத்துவர் முத்துப்பாண்டி என்பவர் இன்சார்ஜ் ஆக பணிபுரிந்து வருகிறார்.

 

இவர் தனியார் மருத்துவமனையில் 10 மணி வரை பணிபுரிவதால் அரசு மருத்துவமனை op பிரிவுக்கு தினமும் காலை 10 மணிக்கு மேல் தான் வருகிறாராம் , மதியம் 12:50க்கே கிளம்பி சென்று விடுவாராம். பரிசோதனைக்கு வரும் நோயாளிகளிடம் முகம் கொடுத்து கூட பேச மாட்டாராம் . ஏனோ தானோ என சிகிச்சையை , மருந்துகளை சொல்லிவிட்டு சென்று விடுவாராம் .

 

கிராமப்புறங்களில் இருந்து வரும் நோயாளிகள் தினமும் மூன்று மணி நேரம் டிபி பிரிவில் காத்திருப்பதாக கவலை தெரிவித்துள்ளனர் .

 

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிக்கு தாமதமாக வரும் மருத்துவர்கள் , சுகாதாரமற்ற மருத்துவமனைகளை திடீர் ஆய்வு மேற்கொண்டு அதிரடி நடவடிக்கை எடுத்து வருபவர் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ம. சுப்பிரமணியன் ஆவார் .

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முத்துபாண்டி போன்று ஒரு சில மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி கொண்டு அல்லது சொந்த மருத்துவமனையில் நோயாளிகளை பார்த்துவிட்டு தாமதமாக வருவதாக கூறப்படுகிறது . அரசு மருத்துவமனையில் பணி செய்யும் மருத்துவர்கள் வெளியே தனியாக மருத்துவமனை வைக்க வேண்டாம் , தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டாம் என கூறவில்லை . அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் பணி செய்தால் போதும் என நோயாளிகள் தெரிவித்துள்ளனர்.

 

வெளி மருத்துவமனையில் பணிபுரிந்து விட்டு முத்துப்பாண்டி போன்ற மருத்துவர்கள் இனியாவது நேரத்துக்கு வருவார்களா ? சுகாதாரத்துறை அமைச்சர் நடவடிக்கைக்கு பின் சரியானத்துக்கு வருவார்களா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.