இனி யாராவது சினிமாகாரங்ககிட்ட செல்பி எடுக்கிறேன், அத எடுக்குறேன்னு வாங்க, செருப்பை கழட்டி அடிப்பேன், நடிகையின் பரபரப்பு பதிவு.
இனி யாராவது சினிமாகாரங்ககிட்ட செல்பி எடுக்கிறேன், அத எடுக்குறேன்னு வாங்க, செருப்பை கழட்டி அடிப்பேன், குழந்தையில்லாமல் எத்தனையோ பேர் ஐவிஎஃப் சென்டரில் போய் நிற்கிறார்கள், உங்கள் குழந்தையை இப்படி ஒரு கூட்டத்திற்கு கூட்டிட்டு போனதுல உயிரே போச்சே என நடிகை வினோதினி வைத்தியநாதன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து வினோதினி வைத்தியநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சினிமா சினிமா எங்கும் சினிமா எதிலும் சினிமா. இனி யாராவது என் முன் சினிமாக்காரங்ககிட்ட செல்பி எடுக்குறேன், அது எடுக்குறேன் இதப்புடுங்குறேன்னு வாங்க… செருப்ப கழட்டி அடிப்பேன். குழந்தையில்லாம இன்னிக்கு எத்தனபேரு ஐவிஎப் சென்டர்ல போயி கஷ்டப்படறாங்க. கேஷுவலா உங்க குழந்தைய பெரிய கூட்டத்துக்கு கூட்டிட்டு போறதும், நடிகனுங்க உங்க குழந்தைக்கு பேரு வைக்கணும்னு அலையிறதும்… கூட்ட நெரிசல் இல்லன்னாலும் ஏதாவது வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கா இல்லையா?
உங்க குழந்தைக்கு உங்க முன்னோர்கள் பேரோ உங்க குலசாமி பேரோ வையுங்க.. அது என்ன நடிகன் உங்க குழந்தைக்கு பேரு வைக்கணுமுங்குற வெறி… படிப்பு மட்டும் இருந்தா போதுமா… சுயமரியாதையில்ல… பகுத்தறிவு இல்ல… இதுல ஜென் ஸி ஜென் ஆல்பான்னு உருட்டு…
இதைச் சொன்னா எங்கள பூமர்னு நக்கல் பண்ண வேண்டியது… சினிமால நடிக்க நாங்க காசு வாங்குறோம்… அதைப் பார்க்க நீங்க காசு செலவழிக்குறீங்க… இந்த வித்தியாசம் புரியலையா? FDFS போகவேண்டியது… பால் அபிஷேகம் செய்ய வேண்டியது… ஒரு நாள் காலையில நேரத்துக்கு எழுந்து உங்கம்மாவுக்கோ அக்காவுக்கோ ஒரு வாய் காபி போட்டு கொடுத்துருப்பீங்களா… வடக்கன் வந்து நம்ம வேலையெல்லாம் புடுங்குறான்னா எப்படி வராம இருப்பான்… அவன் குடும்பம் குட்டின்னு காசு சேர்த்து ஊருக்கும் அனுப்பி அங்கேயும் விவசாய நிலத்த விட்டுக் கொடுக்காம அண்ணன் தம்பின்னு எப்படியோ அந்த நிலத்த பாதுகாத்துக்குறான்.
இங்க பத்தாவது முடிச்சுட்டு ஸ்விக்கி ஓட்டுறேன் ராபிடோ ஓட்டுறேன்னு காலையில வேலை ஈவினிங் சரக்கு கஞ்சான்னு போயிட்டிருக்கானுங்க ரசிக குஞ்சுங்க. பாட புத்தகத்தத் தவிர ஒரு நாவல் படிச்சது கிடையாது… வாசிப்பு கிடையாது, பேசிக் மெகானிக்ஸ் அல்லது வீட்டுப்பொருட்கள ரிப்பேர் பண்ற திறன் கூட கிடையாது… லேட்டஸ்ட் சினிமாபாட்டோட வரிகள் மட்டும் முழுசா தெரியும்… இதை ஆடியோ லாஞ்சுல வளர்த்து விடுற நடிகனுங்க இசையமைப்பாளனுங்க… கேவலம். மகாக்கேவலம்.
அப்பா அம்மா காசுல சுத்தித் திரியுற கூட்டம். நான் கல்லூரி படித்த காலத்துல இருந்த என் சக வயது ஆண் தோழர்கள்ட நாங்க பார்த்த அறிவோ திறனோ ஜெயிக்கணுமுங்குற உழைப்போ இன்னிக்கு இருக்குற இளைய தலைமுறைட்ட சுத்தமா இல்ல. மொத்தமா சினிமாவால மூளைச்சலவை செய்யப்பட்ட கூட்டம்.
பொறந்ததுலேர்ந்து செல் போனோடயே கக்கூஸ் போன கூட்டம். இதுங்கள நினைச்சா, இதுங்ககிட்டதான் நம்ம தமிழ்நாட்டோட தலையெழுத்து இருக்குன்னு நினைக்கும் போது அடுத்த இருபது, முப்பது வருஷத்த நினைச்சா பயமா இருக்கு. இவ்வாறு நடிகையும் முன்னாள் மநீம நிர்வாகியுமான வினோதினி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் சமூக உணர்வுகளுடன் ஏராளமான வீடியோக்களை போட்டுள்ளார்.
மேலும் ஜிஎஸ்டி வரி விதிப்பின்போது மத்திய அரசை கிண்டல் செய்தும் வீடியோ போட்டிருந்து அவை வைரலானது குறிப்பிடத்தக்கது.