Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி உறையூரில் தனியார் நிறுவன காவலாளி கழிவறையில் மயங்கி விழுந்து பரிதாப சாவு

0

'- Advertisement -

திருச்சி உறையூரில் தனியார் நிறுவன காவலாளி கழிவறையில் மயங்கி விழுந்து  திடீர் சாவு

Ad banner

உறையூர் காவல் நிலைய போலீசார் விசாரணை.

திருச்சி உறையூர் வாத்துக்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரராஜன். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார் .நேற்று வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி ஜெயலட்சுமி

தனது மகன் நவீன்

உதவியுடன் பாத்ரூமை திறந்து பார்த்தபோது அங்கு மயங்கி கிடந்தார். பின்னர் அவரை மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சுந்தர்ராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் உறையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.