திருச்சியில் .இளைஞர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் விச்சு தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மைக்கு செருப்படி
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டித்து இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே எடப்பாடி பழனிச்சாமியின் உருவ பொம்மையை செருப்பால் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து இளைஞா் காங்கிரஸாா் திருச்சியில் நேற்று வியாழக்கிழமை மாலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவா் கு. செல்வப்பெருந்தகையை எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி பல கட்சியில் இருந்து வந்தவர் செல்வ பெருந்தகை என விமா்சித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதை கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதன் ஒருபகுதியாக, இளைஞா் காங்கிரஸ் சாா்பில் திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே நேற்று மாலை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இளைஞா் காங்கிரஸின் தேசிய பொதுச் செயலாளா் விச்சு (எ) லெனின் பிரசாத் தலைமை வகித்தாா்.
இதில், காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகையை எடப்பாடி பழனிசாமி விமா்சித்ததைக் கண்டிப்பது, தனது பேச்சுக்கு பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும், பேசிய பேச்சை திரும்பப் பெற வேண்டும், இனிமேல் தலைவா்களை தரக் குறைவாகப் பேசுவதை எடப்பாடி பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில், திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் எல். ரெக்ஸ், நிா்வாகிகள் சோபியா, பேட்டரிக் ராஜ்குமாா், தெற்கு, வடக்கு மாவட்ட நிா்வாகிகள், இளைஞா் காங்கிரஸ் மாநில நிா்வாகிகள் சரவணன் சுப சோமு, அபுதாஹிா், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் பஜார் மைதீன், மாநகா் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதில், எடப்பாடி பழனிசாமியின் உருவப்படம் மற்றும் உருவ பொம்மையை காங்கிரசார் செருப்பால் அடித்தனர் .அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கோட்டை காவல் நிலையம் போலீஸாா், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்களிடமிருந்து படங்கள் மற்றும் உருவப்பொம்மையை பறித்து அப்புறப்படுத்தினா்.
எடப்பாடியின் உருவ படத்தை செருப்பால் அடித்த ஆர்ப்பாட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .