திருச்சி எடமலைப்பட்டி புதூரில் ஆசைவார்த்தை கூறி 9ம் மாணவியை படிக்கட்டில் வைத்து பலாத்காரம் செய்த 26 வயது வாலிபர் .
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் ஆசைவார்த்தை கூறி 9ம் மாணவியை படிக்கட்டில் வைத்து பலாத்காரம் செய்த 26 வயது வாலிபர் .
போக்சோவில் வாலிபர் கைது.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் வசித்து வரும் ஓர் மாணவி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.அந்த மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டி (வயது 26) என்ற வாலிபர் கடந்த ஆறு மாதமாக காதலித்து வந்துள்ளார்.இருவரும் காதலித்து வந்த நிலையில் மருதுபாண்டி அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை அவரது வீட்டு கழிவறைக்கு செல்லும் படிக்கட்டில் வைத்து பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து அந்த மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கன்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி வழக்குப்பதிந்து வாலிபர் முத்துபாண்டியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார் .
14 வயது பள்ளி மாணவியை 26 வயது வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .