Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ஓரினச்சேர்க்கை பழக்கத்தால் ரயிலில் இருந்து குதித்து அண்ணா பல்கலைக்கழக மாணவர் தற்கொலை : மாணவர்கள் 5 மாணவர்கள் கைது

0

'- Advertisement -

திருச்சியில் ஓரினச்சேர்க்கை பழக்கத்தால் ரயிலில் இருந்து குதித்து அண்ணா பல்கலைக்கழக மாணவர் தற்கொலை :

மாணவர்கள் 5 மாணவர்கள் கைது

மிரட்டி பணம் பறித்த வீடியோ, கடிதம் சிக்கியது -பரபரப்பு தகவல்கள்

ஒரினச்சேர்க்கைஈர்ப்பால் இளைஞர்

ரயிலில் இருந்து குதித்துஉயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில் ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் திருச்சியில்

பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகரை சேர்ந்தவர் மாரீசன் (வயது 21) .அவரது

தாய் இறந்துவிட்ட நிலையில்,

தந்தை கொலை வழக்கொன்றில் சிக்கி மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது

தாய்மாமா வளர்ப்பில்

இருந்து வந்த மாரிசன் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார்.

தன்பாலின ஈர்ப்பில் ஈடுபாடு கொண்டமாரீசனுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் இளங்கோவன், (வயது 21) முத்துராஜா (வயது 20 )

பாண்டீஸ்வரன் (வயது 21)

அந்தோணி சஞ்சய் (வயது 20)

பாலா (வயது 22 )

என்ற தன்பாலின

ஈர்ப்பாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டது.

 

 

இவர்கள் அனைவரும் அரியமங்கலம் ரயில்வே கிரவுண்ட் ,

அண்ணா பல்கலைக்கழக வளாக ஒதுக்குப்புறங்களில் சந்தித்துக் கொண்டனர்.

அப்போது இளங்கோவன்

உள்ளிட்டு ஐந்து பேரும்

தங்களது செய்கைகளை செல்போனில் படம் பிடித்துக் கொண்டனர்.

விபரீதத்தை உணராத மாரீசன் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க

வில்லை.

ஒரு கட்டத்தில்

அந்த கும்பல்

மாரிசனிடம்

தாங்கள் எடுத்த அந்தரங்க வீடியோக்களை காட்டி பணம் பறிக்க தொடங்கியது.

மிரட்டலுக்கு பயந்த மாரீசன்

தனது தாய் மாமாவிடம் கல்லூரி கட்டணம் கட்ட வேண்டும், ப்ராஜெக்ட் செய்ய வேண்டும்

என பல பொய்களை கூறி பணத்தை வாங்கி அந்த கேங்கிடம்

கொடுத்து வந்தார்.

 

 

ஒரு கட்டத்தில்

பணம் கொடுக்க முடியாமல் பயந்து போன மாரீசன் நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் இருந்து சென்னை சென்ற பல்லவன் விரைவு ரயிலில் ஏறி

திருச்சிக்கு வந்தார். ரயில்

மண்டையூர் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென ரயிலில் இருந்து குதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

இதுகுறித்து திருச்சி ஜங்ஷன் இருப்புப் பாதை காவல் நிலைய ஆய்வாளர் ஷீலா

வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்

கொண்டார்.

மாரிசனின் செல்போனில் இளங்கோவன் கேங்க் அனுப்பிய போட்டோக்கள் வீடியோக்கள் மற்றும் மிரட்டும் ஆடியோக்கள் இருந்தது.

மேலும்

தனக்கு நேர்ந்த கொடுமைகளை தன் கைப்பட விளக்கமாக எழுதப்பட்ட கடிதத்தை மாரீசன் தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்தார்.

அதனை மீட்டு

படித்த போது

பல்வேறு திடுக்கிடும் தகவல்கள்

வெளியானது.

 

இதனைத் தொடர்ந்து மிரட்டி பணம் பறித்த ஐந்து பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.