Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மதுவுடன் இளம் பெண்கள் குளுகுளு நடனம். சுற்றிவளைத்த காவல்துறையினர்.

மதுவுடன் இளம் பெண்கள் குளுகுளு நடனம். சுற்றிவளைத்த காவல்துறையினர்.

0

 

*மது விருந்துடன் குளுகுளு நடனம்.. சுற்றிவளைத்த போலீசார் !*

சென்னை நீலாங்கரை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான பாரில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக புகார் எழுந்தது. அதாவது அந்த பாரில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் விளம்பரம் செய்து, மது விருந்துடன் இளம்பெண்களை வைத்து நடன நிகழ்ச்சி நடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து நீலாங்கரை போலீசார் அந்த பாரை ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது இரவு நேரங்களில் அந்த பாருக்கு இளைஞர்கள், இளம்பெண்கள் அதிகளவு வந்து செல்வது தெரியவந்தது.

 

இதனையடுத்து அதிரடியாக உள்ளே புகுந்த போலீசார் சோதனை நடத்தியபோது, மது விருந்துடன் நடன நிகழ்ச்சி நடைபெற்றது உறுதியானது. பின்னர் அவர்கள் அணைவரையும் போலீசார் சுற்றி வளைத்தனர்.
இதுதொடர்பாக, பார் மேலாளர் பாடியை சேர்ந்த ஸ்டாலின்(32), நடன நிகழ்ச்சி நடத்திய ஜாம்பஜாரை சேர்ந்த வசந்த்(22), சட்டவிரோதமாக மது விற்பனை செய்த பாடியை சேர்ந்த கணேஷ்(26) ஆகிய 3 பேரை பிடித்துச்சென்றனர்.

விசாரணையில் சட்டவிரோதமாக பார் நடத்தி வந்தது உறுதியான நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பார் மேலாளர் ஸ்டாலினை கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.