திருச்சியில் கல்லறை திருநாள். அனுமதி இல்லாத கல்லறைகள் விபரம்
திருச்சியில் கல்லறை திருநாள். அனுமதி இல்லாத கல்லறைகள் விபரம்
இறந்தவர்களை புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று பிராத்தனை செய்யும் நாளை கல்லறை திருநாளாக கடைப்பிடிப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காலகட்டம் என்பதால் முதலில் அனைத்து ஆலயங்களிலும் கல்லறைகள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் திருச்சி மறை மாவட்ட ஆயர் பொறுப்பு தேவதாஸ் அம்புரோஸ் வழக்கமாக கல்லறை திருநாள் கொண்டாடப்படும் என கூறியிருந்தார். திருச்சி பூந்தோட்டம், கண்டோன்மெண்ட் ஆங்கிலோ இந்தியன், உறையூர் கல் நாயக்கன் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கல்லறைகளில் இன்று வழக்கம்போல் கல்லறை திருநாள் நடைபெற்று வருகிறது. ஆனால் குட்ஷெட் ரோட்டில் உள்ள R.C.M.C. கல்லறை தோட்டம், ஆச்சாரிமார்களின் கல்லறை தோட்டம் மற்றும் பாலக்கரை வேர்ஹவுஸில் உள்ள R.C.M.C. அனெக்ஸ் கல்லறை தோட்டம் ஆகிய இடங்களில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. நேற்றும், இன்று 2ம் தேதியும் பொதுமக்கள் வருவதற்கு அனுமதி இல்லை என அங்கு பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது.