திருச்சி மாநகராட்சி 50, 65 ஆகிய வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்
திருச்சி மாநகராட்சி

50, 65 ஆகிய வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்
பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது
திமுக அரசின் சேவைகளை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்
உங்களுடன்_ஸ்டாலின் திட்ட முகாம், கிழக்குத் தொகுதி திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் -2
வார்டு எண்.50 உட்ப்பட்ட பகுதி மக்களுக்கு மண்டலம் 2 பழைய அலுவலகத்திலும், மண்டலம் 4 வார்டு எண் 65 ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஏர்போர்ட் ரோட்டில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்திலும் உங்களுடன் ஸ்டாலின் முகம் நடைபெற்றது.

அதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து உடனே தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான ஆணைகளைப் பயனாளிகளிடம் வழங்கினார்.
மேலும் முகாமில் கலந்து கொண்ட அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து
பெறப்படும் மனுக்கள் குறித்தும் அதற்கு தீர்வு காண்பது குறித்தும் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர்
வே.சரவணன் மாநகர செயலாளர் – மண்டல குழு தலைவர்
மு.மதிவாணன், துணை மேயர் திவ்யா தனக்கோடி,
மாமன்ற உறுப்பினர் ரிஸ்வான பானு, ஆர்டி.ஓ .அருள், வட்டாட்சியர் விக்னேஷ்,
துணை வட்டாட்சியர் கார்த்திகேயன், மாநகராட்சி பொறியாளர் பாபாபக்குருதின் பகுதி செயலாளர்கள் ராஜ் முகமது, மணிவேல்,
வட்ட செயலாளர் சீனிவாசன், ஞானசேகர், பன்னீர், சேகர் உள்பட ஏராளமான கடந்து கொண்டனர் .
இந்த முகாம்களில் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

