திருச்சி மாநகராட்சியின் பணியிட மாறுதல்களில் நடந்த குளறுபடிகள். நடிவடிக்கை எடுப்பாரா? திருச்சி மாநகராட்சி ஆணையர்?
திருச்சி மாநகராட்சியின் பணியிட மாறுதல்களில் நடந்த குளறுபடிகள். நடிவடிக்கை எடுப்பாரா? திருச்சி மாநகராட்சி ஆணையர்?
திருச்சி மாநகராட்சியில் தேர்வு மூலம் 6 அனுபவமில்லாத A.E. களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே திருச்சி மாநகராட்சியில் அதிகாலை முதல் இரவு வரை பணி நேரம் பார்க்காமல் கடுமையாக உழைத்த 6 JE க்கள் வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் எவ்வித பணியும் இல்லாத கம்பரசம்பேட்டையில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் வார்டுகளில் எப்படி வேலை செய்ய வேண்டுமென வேலை தெரிந்த சீனிவாசன், சாவணன், ரவிச்சந்திரன், முரளி சண்முகம் ஆகிய நான்கு நபர்களும் எவ்வித பணியும் செய்யாமல் J.E கணக்கில் மாதச் சம்பளம் பெற்றுக் கொண்டு வருகின்றனர்.
மேலும் புதிதாக நியமணம் செய்யப்பட்ட அரசுப் பணியாளர்களை வைத்து மாநகராட்சி பணிகளை பார்பதை விட மேற்கண்ட வேலை தெரிந்த நான்கு நபர்களை வார்டுகளில் பணி அமர்த்தினால் மாநகராட்சி நிர்வாகத்தின் பணிகள் செவ்வனே நடைபெறும் என்பது பொதுமக்கள் கருத்து.
இதில் என்ன பிரச்சினை என்றால் கடந்த பத்து வருடங்களாக திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்திலேயே சரியாக எட்டு மணி நேரம் மட்டுமே பணிபுரிந்து வரும் இரண்டு AE க்கள் (சங்கீதா, மற்றும் முத்துலட்சுமி) பதவி பட்டியலில் உதவி நிர்வாகப் பொறியாளர்களாக பின்தங்கி இருந்த இவர்களுக்கு நல்ல பணியாளர்கள். திறமையானவர்கள், அனைத்து பணிகளையும் நன்றாக செய்து முடிப்பார்கள் என்று முன்னாள் மாநகராட்சி ஆணையரும் தற்போதைய திருச்சி மாவட்ட ஆட்சியருமான .
சரவணன் மேற்கண்ட A.E.களான (சங்கீதா, மற்றும் முத்துலட்சுமிக்கும்) சான்று அளித்துள்ளார்
மாநகராட்சி முன்னாள் ஆணையரால் சான்று அளிக்கப்பட்ட திறமையான இரண்டு A.Eக்களும் திருச்சி மாநகராட்சி வார்டு களுக்கு பதவி நியமணம் செய்தால் வார்டு பிரதிநிதிகளுக்கும், பொது மக்களுக்கும் எவ்வித நிர்வாக பிரச்சினைகளும் இல்லாமல் , திறமையான நிர்வாகம் ஏற்பட ஏதுவா இருக்கும் .
ஆறு மாத காலத்தில் வர இருக்கும் சட்டமன்றத் தேர்தல் காலத்தில் மேற்கண்ட திறமையான நபர்களை வார்டுகளில் பணி நியமணம் செய்தால் நடைபெறும் ஆட்சிக்கு நல்ல பெயரும், பொது மக்களிடம் பாரட்டும் பெறும் வகையில் இருக்கும் என்பதை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .
நேர்மைக்கு பேர் போன திருச்சி மாநகராட்சி ஆணையர் பணியிட மாறுதலில் என்ன நடந்தது என்பதை தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பம் ஆகும் .