எடமலைப்பட்டி புதூரில் ஜவுளி ஊழியரிடம் 2 பவுன் நகை பறிப்பு .
மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு .
திருச்சி மாவட்டம் மணப்பாறை குமாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 43) இவர் திருப்பூரில் உள்ள ஜவுளி கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் திருப்பூரிலிருந்து திருச்சி வந்து மணப்பாறைக்கு செல்ல பேருந்துக்காக காத்திருந்தார் .
இந்நிலையில் அங்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கிருஷ்ணமூர்த்தி அருகில் வந்து அவரிடம் பேச்சு கொடுத்து மது அருந்த அழைத்துச் சென்றுள்ளார். இருவரும் மது அருந்திவிட்டு பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று மர்ம ஆசாமி கிருஷ்ணமூர்த்தி கழுத்திலிருந்து 2 பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டார்.
இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணமூர்த்தி எடமலைப்பட்டி காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அப்புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.