தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்க தலைவர் டாக்டர் செந்தில்நாதன் பிறந்தநாள் விழா: காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் பஜார் மைதீன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் நேரில் வாழ்த்து .
Birthday of Tamil Nadu Cholaiya Wellars Association Dr. Senthilnathan's Birthday. Bazzar Maideen Wishes
திருச்சி ஜி கார்னரில் கடந்த மாதம் நடைபெற்ற ஒருங்கிணைந்த வெள்ளாளர் மற்றும் வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற மாபெரும் வெற்றி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் செந்தில் நாதனின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் கி ஆ பெ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் சங்க நிர்வாகிகள் பலரும் திரளாக கலந்து கொண்டனர் .
டாக்டர் செந்தில் நாதன் கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார் .
டாக்டர் செந்தில் நாதனுக்கு திமுக, அதிமுக, மதிமுக , பாஜக காங்கிரஸ். மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர் .
காங்கிரஸ் கட்சியின் திருச்சி சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் பஜார் மைதீன் நேரில் சென்று டாக்டர் செந்தில் நாதனுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தார் . நிர்வாகிகள் O.M.பாலா, உறையூர் சரண், இர்பான், தில்லை ஜெய்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .
பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சைவ மற்றும் அசைவ உணவு வழங்கப்பட்டது .