திருச்சி சஞ்சீவி நகரில் உள்ள சமுதாய கூடத்தில்
லயன்ஸ் சாசன கிளப் சார்பில் சஞ்சீவி நகர் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மேலும் லயன்ஸ் கிளப் தலைவர் நடராஜன், செயலாளர் குமரேசன், பொருளாளர் செல்வம், மற்றும் லெனின் உள்ளிட்ட நிர்வாகிகளும்
ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி ராக்சிட்டி கிளையின் தலைவர் சுகுமாரன் மற்றும் நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்து இருந்தனர்.
இந்த சிறப்பு முகாமில் 300 நபர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது.