Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கலைஞர் பிறந்த நாள்: இனிகோ இருதயராஜ் MLA ஏற்பாட்டில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

0

திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் கலைஞர் அவர்களின் 98 ஆவது பிறந்த நாள் விழா.

திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு தொகுதி கலைஞர்நகர், பாலக்கரை , மலைக்கோட்டை பகுதிகளில் ஏழை எளியவர்களுக்கு உணவு மற்றும் கொரோனாவல் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழா கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு உணவுப் பொருட்களையும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பகுதி கழக செயலாளர்கள் பாலமுருகன், மதிவாணன், ராஜசேகர், அரங்கநாதன், முன்னாள் கவுன்சிலர் லீலா வேலு, தெற்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கேபிள் கண்ணன், நாகவேணி மாரிமுத்து , செந்தில், மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் பொதுமக்கள் என பெரும் திரளாக கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.