Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரோட்டரி கிளப் திருச்சி நெக்ஸ்ட் ஜென் இரண்டாம் ஆண்டு நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

0

'- Advertisement -

ரோட்டரி கிளப் திருச்சி நெக்ஸ்ட் ஜென் இரண்டாம் ஆண்டு நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

 

ரோட்டரி கிளப் ஆப் திருச்சி நெக்ஸ்ட் ஜென் சார்பாக பதவியேற்பு மற்றும் புதிய உறுப்பினர்கள் அறிமுக விழா திருச்சியில் உள்ள ஜென்னி பிளாசாவில் வளூர் ஹாலில் நடைபெற்றது. ரோட்டரி ஆளுநர் (2026-2027) ஆர் பி எஸ் மணி கலந்து கொண்டார்.

 

அவர் கூறுகையில்:- ரோட்டரி மக்களுக்கு என்னவெல்லாம் சேவை செய்கிறது எவ்வாறு செய்கிறது என்பதையும் போலியோ இல்லா உலகத்தை ரோட்டரி உருவாக்கியதையும் அது உருவாக பாடுபட்டதையும் மற்றும் ரோட்டரி இன் கனவு திட்டமான சிறப்பு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி பள்ளி கல்லூரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி குழந்தைகள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

இன்றைய இளைஞர்கள் மது போதை உள்ளிட்ட தவறான வழியில் செல்லாமல் இருக்க அவர்களுக்கு வழங்க வேண்டிய அறிவுரைகள் உள்ளிட்ட ரோட்டரி இன் கனவு ஆண்டின் திட்டங்கள் குறித்து விவரித்தார்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஆளுநர் ஆனந்த ஜோதி அவர்கள் கலந்து கொண்டார்கள் நிகழ்ச்சியில் ஆனந்த ஜோதி அவர்கள் பேசுகையில் ரோட்டரியின் முக்கியத்துவம் ரோட்டரி செயல்பாடுகள் ரோட்டரி இன் சேவைகள் குறித்தும் ரோட்டரி நம்முடைய பங்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் தெளிவாக விளக்கிக் கூறினார்கள். சங்க ஆலோசகர் சுபா பிரபு அவர்கள் பேசுகையில் ரோட்டரி கிளப் திருச்சி நெக்ஸ்ட் ஜென் உருவான விதமும் ஆற்றும் நற் செயல்களையும் கடந்த ஆண்டு செய்த ப்ராஜெக்ட்கள் ஆசை மகள் திட்டம் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி அன்னதான நிகழ்ச்சி சிறு குழந்தைகளுக்கு விழிப்பு நிகழ்ச்சி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து வீதி நாடகங்கள் உள்ளிட்ட செயல்பாடுகளை குறித்து பேசி பாராட்டினார். மண்டல ஆளுநர் ஹேமலதா அவர்கள் பேசும்போது ரோட்டரி இன் பயன்பாடுகள் அதில் சங்கங்கள் செயல்படக்கூடிய நிகழ்ச்சிகள் சம்பந்தமாக பேசினார். துணை ஆளுநர் கிருபாகரன் அவர்கள் பேசும்போது சங்கம் இவ்வாறு நடத்த வேண்டும் எவ்வாறு மக்களுக்கு செயலாற்ற வேண்டும் என்ற திட்டங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தெளிவாக விளக்கிக் கூறினார். நிகழ்ச்சியின் தொடக்கமாக சிறப்பு விருந்தினர் ஆர்பிஎஸ் மணி அவர்கள் புதிய தலைவர் அப்துல் ரஹீம் அவர்களுக்கு தலைவராக பதவி பதவி ஏற்றார். சிறப்பு அழைப்பாளர் ஆனந்த ஜோதி செயலாளராக பிரபு பதவியேற்றார். சங்க ஆலோசகர் சுபா பிரபு பொருளாளராக கோபிகிருஷ்ணன் பதவியேற்றார்.

 

புதிய தலைவர் அப்துல் ரஹீம் பதவியேற்று இந்த ஆண்டிற்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தலைக்கவசம் விழிப்புணர்வு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பந்தமான விழிப்புணர்வு குழந்தைகள் எதிரான வன்கொடுமை சம்மந்தமான விழிப்புணர்வு போதை விழிப்புணர்வு ரத்த தானம் முகாம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சேர்மன் முருகானந்தம் அப்பாஸ் மற்றும் பல்வேறு சங்கத் தலைவர்கள் செயலாளர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.