திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காங்கிரஸ் பிரமுகர் கைது.
பாரத பிரதமர் மோடி இன்று இரவு திருச்சி வந்து நாளை கங்கைகொண்ட சோழபுரம் சென்று மீண்டும் விமான நிலையம் வந்து டெல்லி கிளம்புகிறார் .
இந்த நிலையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகையின் அறிவுறுத்தலின்படி மாநகர காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ் நாளை காலை எட்டு முப்பது மணியளவில் மரக்கடையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்து இருந்தார்.
திருச்சியை சேர்ந்த திருச்சி மாநகர் மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு தலைவர் பஜார் மைதீனை மோடிக்கு கருப்பு பலூன் விடுவதாக எண்ணி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று சனிக்கிழமை மாலை 7 மணி முதல் திருச்சி கோட்டை காவல் நிலைய போலீசார் பஜார் மைதீனை கைது செய்து காவல் நிலையத்தில் அமர வைத்துள்ளனர் .