Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழியின் சொந்த தொகுதியில் 60 ஆடுகளை கடித்துக் கொன்ற நாய்கள் தற்போது மனிதர்களை…… நடவடிக்கை எடுக்கப்படுமா? பொதுமக்கள் சார்பில் எஸ் கே டி கார்த்திக் .

0

'- Advertisement -

பள்ளிகளை துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சொந்த தொகுதியில் (வேங்கூர் ஊராட்சியில், தெரு நாய்களின் அட்டூழியம்.

 

பல முறை புகார் அளித்தும் கண்டுகொள்ளாத கண்டு கொள்ளாத வட்டார வளர்ச்சி அலுவலகர்கள்.

 

வயல் வெளியில் மேய்கின்ற ஆடுகளை இதுவரை சுமார்‌ 60 ஆடுகளுக்கு மேல் கடந்த ஒரு மாதத்திற்குள் வெறி நாய்கள் கடித்து குதறி கொன்று வந்துள்ளது.

 

தற்போது இன்று வேங்கூர் வடக்கு தெருவில் உள்ள தங்கையன் என்பவர்க்கு சொந்தமாக வீட்டில் வளர்த்து வந்த ஆடுகள் ஈன்ற இளம் குட்டிகள் சுமார் 12 குட்டிகளை வெறிநாய்கள் கடித்து குதறி கொன்று விட்டு சென்றுள்ளன.

 

இந்த நாய்கள் தற்போது தெருக்களில் உலா வரத் தொடங்கிவிட்டன.

சிறு பிள்ளைகள் தெருவில் கடைகளுக்கு, பள்ளிக்கு சென்றால் கூட நாய்கள் தினந்தோறும் துரத்தி வருகின்றன.

 

இன்று ஆடுகளின் உயிர் நாளை மனிதர்களின் உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுவதை தடுக்க திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாச்சியர் மற்றும் காவல் துறை ஆய்வாளர்கள் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் சார்பில் அதிமுக திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் எஸ்.கே.டி. கார்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.