எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் மா.செ. வெல்லமண்டி நடராஜன் நிவாரண பொருட்கள் வழங்கினார்.
அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில், எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச்செயலாளர் ஜெ.சீனிவாசன் அவர்களின் ஏற்பாட்டில்,
திருச்சி மாநகர் மாவட்டம், மலைக்கோட்டை பகுதி, 10வது வார்டு, பாறையடி தெருவில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை முன்னாள் அமைச்சர், திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் வெல்லமண்டி என்.நடராஜன் வழங்கினர்.
இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் பத்மநாபன், ராஜேந்திரன், தென்னூர் அப்பாஸ், கருடா நல்லேந்திரன், தாயார் சீனிவாசன், வட்ட கழக செயலாளர்கள் ராமசாமி, எடத்தெரு சந்திரன் மற்றும் ஆர்.எம்.ஜி.கண்ணன், ஜவகர், திருச்சி ஜி.நாகு, கிஷோர், தமிழ்ச்செல்வன், கார்த்தி, திருமலை, ஆசைத்தம்பி, ரோஜர், பால் சீனிவாசன், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.