Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கொரோனா நிவாரண நிதி 2 -ஆம் தவணை ரூ.2 ஆயிரம் . நாளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

0

 

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. அதில், 2 கோடியே 7 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு முக்கிய இடம் பெற்றிருந்தது. நிவாரண நிதி ரூ.4 ஆயிரத்தில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த மாதம் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், கொரோனா நிதியுதவியின் 2 வது தவணை ரூ.2000 வழங்கும் திட்டத்தை நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 10 பேருக்கு நிவாரண நிதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

மேலும், நாளை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு பல திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

அதில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 மளிகைப் பொருட்களை இலவசமாக வழங்கும் திட்டத்தையும்,

கோயில்களில் வேலைபார்க்கும் பூசாரிகள்,பட்டாச்சார்யர்கள், அர்ச்சகர்களுக்கு ரூபாய் 4,000 நிவாரணமும், 10 கிலோ அரிசி ,15 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.

கொரோனா பாதிக்கப்பட்டு பத்திரிக்கையாளர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் உயர்த்தப்பட்ட திட்டம்,

திருநங்கைகள் கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணிக்க அனுமதி, மருத்துவ மற்றும் காவலர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.