Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் சிறுமியுடன் உடலுறவு கொண்ட கணவன் உட்பட 5 பேர் மீது வழக்கு

0

'- Advertisement -

திருச்சியில் சிறுமியுடன் உடலுறவு கொண்ட .

கணவன் உட்பட 5 பேர் மீது வழக்கு.

 

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணவன் மற்றும் அவரது உறவினர் மீது ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை.

 

 

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி, முத்தையா காலனியை சேர்ந்தவர் அஜித் ( வயது 29.) இவர் திருச்சியை சேர்ந்த தனது உறவினரான 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த மே மாதம் 28 – ந் தேதி இருவருக்கும் அவர்களது பெற்றோர் சம்மதத்துடன் திருச்சி தில்லைநகரில் உள்ள கோவிலில் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த திருமணம் குறித்து திருச்சி மாவட்ட குழந்தைகள் நல குழுவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அந்த சிறுமியை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அஜித் குமார் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உடலுறவு கொண்டது தெரிய வந்தது . .இதையடுத்து ஶ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் அஜித் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழககுப்பதிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அவரது குடும்பத்தினரான குருசாமி, சின்னபொண்ணு, ராம்குமார், சுதா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.