திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி ஹாஸ்டலில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை.

அரியலூர் மாவட்டம் திருமானூர் இலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மகன் அபிஷேக் (வயது 18 ).இவர் திருச்சி புத்தூர் அருகிலுள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி பி.காம்.2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கல்லூரி வார்டன் அபிஷேக் சரியாக கல்லூரிக்கு சரியாக வரவில்லை என தந்தையிடம் செல்போனில் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். இதனால் மனமுடைந்த அபிஷேக் கல்லூரி விடுதி கழிவறையில் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் உறையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது . இன்று காலை மாணவனின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர் இதனை தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் முற்றுகையிட்டனர் . இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது .

