2012-ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று வருபவர் புவனேஷ்வர் குமார். ஆனால் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் சேர்க்கப்படவில்லை. காயம் காரணமாக டெஸ்ட் அணியில் அவர் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது. எனினும் 20 ஓவர் அணியில் புவனேஷ்வர் குமார் நிச்சயம் இடம்பெறுவார் எனக் கூறப்படுகிறது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டில் புவனேஷ்வர் குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கொரோனா அறிகுறி இருப்பதால் மருத்துவர்கள் அறிவுரையின்படி புவனேஷ்வர் குமாரும் அவரது மனைவி யுநுபுரு தங்களை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டனர்.
தம்பதியினருக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்கப்படு வருகிறது மே 21 அன்று அவரது தாயாருக்கு தொற்று உறுதியானதை அடுத்து குடும்பத்தில் மற்றவர்களும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
கடந்த மாதம் புவனேஷ்வரின் தந்தை கிரண் பால் சிங் கல்லீரல் புற்றுநோயால் காலமானார். அவருக்கு வயது 63.
புவனேஷ்வர் 2012 டிசம்பரில் இந்தியாவில் அறிமுகமானதில் இருந்து இதுவரை 21 டெஸ்ட், 117 ஒருநாள் மற்றும் 48 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவற்றில் மொத்தம் 246 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.