Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கொரோனா நோயாளிகள் 125 க்கும் மேற்பட்டவர்களுக்கு ,இலவச சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தனலட்சுமி சீனிவாசன் தாளாளர் சீனிவாசன் பேட்டி

0

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் தாளாளரும் மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவனின் தந்தையுமான ஏ.சீனிவாசன் அவர்கள் , இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்
மே மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து 150 படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அதில் தீவிர நோய் தொற்று சிகிச்சைக்காக பதினைந்து படுக்கைகளும் மீதமுள்ள 135 படுக்கைகள் லேசான மற்றும் மிதமான கொரோனா நோயாளிகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 210 படுக்கைகள் பிற நோய்களுக்கான சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 105 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தற்போது 40 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பொது மக்களுக்கு அவசர தேவைக்காக மருத்துவ கல்லூரியின் ஆம்புலன்ஸ் சேவை தயார்நிலையில் உள்ளது. எனவே தொகுதி மக்கள் அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் மற்றவர்களுக்கு ஒரு கணிசமான தொகையை பெற்றுக்கொண்டு இந்த ஆம்புலன்ஸ் சேவை செய்ய தயாராக இருக்கிறது. இதுவரை 125 க்கும் அதிகமானோர் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர்.

தேர்தல் நேரத்தில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக கதிரவன் வாக்குறுதிகளாக சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் மக்களுக்காக செய்வோம் எனக் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் மருத்துவர்கள் பேராசிரியர் டாக்டர் .ராஜேஷ் எம்.எஸ்., இணைப்பேராசிரியர் டாக்டர் .சங்கர் எம்.டி., மற்றும் பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து கொரோனா வார்டில் உள்ள நோயாளிகளிடம் நலம் விசாரித்தார், மற்றும் மேற்கொள்ளும் சிகிச்சைகளைப் பற்றி ஆய்வு செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.