திருச்சியில் ராணி மங்கம்மாள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
இராணி மங்கம்மாள் 376 -வது பிறந்தநாள் விழாவையொட்டி திருச்சி மலைக்கோட்டை பகுதி புராதன பூங்காவில் அனைத்து நாயுடு நாயக்கர் பேரவையின் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் லயன் ஆர்.ஜி. முரளி நாயுடு தலைமையில் ஒருங்கிணைந்த மாவட்ட துணை தலைவர் ஆ .. அழகு துரை, ஸ்ரீரங்கம் பகுதி தமிழ்நாடு அனைத்து நாயுடு சங்க பேரவை தலைவர் எஸ்.எம்.வி. மனோகரன், ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் துரைசாமி, திருவனைக்காவல் மகேந்திர மேதா சங்க தலைவர் ஜி. ரோஜா , தமிழ்நாடு நாயுடு சங்க துணை தலைவர் ஸ்ரீரங்கம் மேலூர் ஜி.ராஜா, திருவனைக்காவல் மகேந்திர மேதா மூங்கில் சாமான்கள் உற்பத்தி கூட்டுறவு சங்க தலைவர் ஜி. தியாகராஜன் , ஸ்ரீரங்கம் ஸ்தபதியார் ஆர். ரவிச்சந்திரன் , தமிழ்நாடு நாயுடு சங்க இணை தலைவர் மற்றும் நிர்வாகிகள் இராணி மங்கம்மாள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.