Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக தொகுதி பொறுப்பாளர்கள் பிரேமலதா அறிவிப்பு.புதிய பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளர் பாரதிதாசனிடம் வாழ்த்து பெற்றனர்.

0

'- Advertisement -

2026 சட்டமன்றத் தேர்தல் :

 

திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக தொகுதி பொறுப்பாளர்கள்

பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு .

 

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமனம் நியமனம் செய்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

 

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 

நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், திருச்சி தெற்கு மாவட்டதிற்கு உட்பட்ட மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு தெற்கு மாவட்ட அவைத்தலைவர் அர்ஜுன்,திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு தெற்கு மாவட்ட துணை செயலாளர் நீலமேகம் ஆகியோர் தொகுதி பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்படுகிறார்கள். இவர்களுக்கு திருச்சி தெற்கு மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூர், ஊராட்சி, வார்டு, கிளை கழகம், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்ற தொகுதியில் புதிய உறுப்பினர் சேர்க்கையும், கிளை கழகம் அமைப்பதற்கும், சட்டமன்ற தொகுதிகளில் பூத் கமிட்டி அமைப்பதற்கும், சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், வார்டு, பகுதி, வட்டம், பேரூர், வார்டுகளுக்கு சார்பு அணி நிர்வாகிகள் தேர்வு செய்தும், பூத் முகவர்கள் தேர்வு செய்தும் மாவட்ட கழக செயலாளர்களிடமும், மாவட்ட தேர்தல் பணி பொறுப்பாளர்களிடமும் கலந்து ஆலோசித்து மண்டல பொறுப்பாளர்களிடம் சமர்பிக்க வேண்டும்.

சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் பதவி காலம் வரும் 2026 சட்டமன்ற தேர்தல் முடியும் வரை மட்டும்.

 

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

 

புதிதாக நியமிக்கப்பட்ட சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மாவட்டச் செயலாளர் சன்னாசிப்பட்டி ஆர்.பாரதிதாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.