திருச்சி சுப்ரமணியபுரத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரி தூக்கு போட்டு தற்கொலை.
திருச்சி சுப்ரமணியபுரத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரி தூக்கு போட்டு தற்கொலை
உடலை கைப்பற்றி கேகே நகர் போலீசார் விசாரணை.
திருச்சி சுப்பிரமணியபுரம் பன்னீர்செல்வம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 58 ) சிவில் இன்ஜினியரிங் பட்டதாரி.
இவர் நிலையான வேலையில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் குடி போதைக்கு அடிமையானார்.
ஓய்வு பெறும் வயதில் கூட தனக்கு ஒரு நிரந்தர வேலை அமையவில்லையே என கவலை அடைந்த ஜெயராஜ் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென மனைவியின் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .
இது குறித்து அவரது மனைவி சந்திரகுமாரி கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் கே கே நகர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.